காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 27 – 49
(சித்திரை 28,2045 / 11 மே 2014 தொடர்ச்சி)
27. அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் – சிலப்பதிகாரம், பதிகம் 10
28. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய(த்) – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 37-
29. தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 38
30. ஆடல் பாடல் இசையே தமிழே – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை, 45
31. நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு – சிலப்பதிகாரம், வேனிற் காதை 1- 2
32. வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் – சிலப்பதிகாரம், வேனிற் காதை, 158
33. தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை – சிலப்பதிகாரம், நாடுகாண் காதை, 58
34. தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து – சிலப்பதிகாரம், வேட்டுவவரி, 48
35. வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக் – சிலப்பதிகாரம், கட்டுரை காதை, 63-64
36. தென்றமிழ்நா டொருங்குகாணப் – சிலப்பதிகாரம், கட்டுரை காதை, கட்டுரை 15
37. தண்டமி ழாசான் சாத்தனிஃ துரைக்கும் – சிலப்பதிகாரம், காட்சிக் காதை, 66
38. இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர் – சிலப்பதிகாரம், காட்சிக் காதை 165 – 166
39. தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி – சிலப்பதிகாரம், காட்சிக் காதை 171
40. அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக்
கூற்றங் கொண்டிச் சேனை செல்வது – சிலப்பதிகாரம், கால்கோட்காதை 161 – 162
41. செறிகழல் வேந்தன் றென்றமி ழாற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரை(ச்) – சிலப்பதிகாரம், நீர்ப்படைக் காதை, 5-6
42. அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை – சிலப்பதிகாரம், நீர்ப்படைக் காதை, 189-190
43. பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை – சிலப்பதிகாரம், நீர்ப்படைக் காதை, 209
44. தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் – சிலப்பதிகாரம்,நடுகற் காதை, 153
45. தென்றமிழ்நாடாளும் வேந்தர் செரு வேட்டுப் புகன்றெழுந்து மின்றவழும் இமய நெற்றியில் விளங்கு வில்புலி கயல் பொறித்த நாள் – சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை, உரைப் பாட்டு மடை
46. குமரி, வேங்கடம், குண குட கடலா,
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில் – சிலப்பதிகாரம்,வஞ்சிக்காண்டம், நூல் கட்டுரை 1-2
47 & 48. செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின் – சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், நூல் கட்டுரை 3
49. தெரிவுறு வகையான், செந்தமிழ் இயற்கையில் – சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், நூல் கட்டுரை 14
(தொடரும்)
தரவு : தமிழ்ச்சிமிழ், இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply