(பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும் – தொடர்ச்சி)

பூங்கொடி – கதைச் சுருக்கம்

தமிழகம், எங்கும் விழாக் கோலத்துடன் பொலிந்தது; பொங்கற் புதுநாள் அனைவ்ர் உள்ளத்தையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பகலும் இரவும் கலை நிகழ்ச்சிகள் சிறப் புற்றாேங்கின. ஆனல், அருண்மொழியும் அவள் மகள் பூங்கொடியும் இசையரங்கேற வாராமையால் ஊரார் பலவாறு பேசினர். இதனால் வருந்திய வஞ்சி, தன்மகள் அருண்மொழிக்குத் தேன்மொழி வாயிலாகச் செய்தி கூறியனுப்பினள். மலையுறையடிகளுடைய குறளகத்திற் சேர்ந்த அவள் இத் துறையையே வெறுத்து வாராது நின்றனள். அருண்மொழி தன் தோழியாகிய தேன்மொழியிடம் தன் கணவன் வடிவேல் படுகொலையுண்டதைக் கூற்க் கேட்டுக்கொண்டிருந்த பூங்கொடி தேம்பியழுதனள். அருண்மொழி, அவ்வழுகையை மாற்றப் பூங்கொடியைப் பூங்காவிற்கு அனுப்பினள். தோழியாகிய அல்லியும் உடன் சென்றாள்.

பூங்காக் காட்சிகளை இருவரும் கண்டுகளிக்கும் பொழுது பூங்கொடிமேற் காதல் கொண்ட கோமகன் அங்கு வருவதறிந்து, அஞ்சிய பூங்கொடி, ஆங்கிருந்த படிப்பகத்தினுட் புகுந்தாள். வெளியில் நின்ற அல்லியிடம், தன் உளக்குறிப்பை இவ்ன் புலப்படுத்த, அவள் மறுத்துரைத்துப் பூங்கொடியின் துறவுள்ளத்தை எடுத்துரைத்தாள். கோமகன் ஆசை தணியானாகி அகலத் தாமரைக் கண்ணி அங்கே வந்தனள். அவள் இவ் விருவரின் நிலையறிந்து, முன் வந்த வழியே செல்லாது முத்தத் கூத்தன் கல்லறை வழியே செல்லுமாறு பணித்து, அவன் வரலாறும் கூறிப் பூங்கொடியைக் கடல் நகர்க்கு வருமாறு மொழிந்தகன்றனள்.

பூங்கொடியின் நினைவொடு போகிய கோமகனிடத்துத் தாமரைக்கண்ணி சென்று, இடித்துரை கூறி மீண்டனள். தாமரைக்கண்ணி கூறியவாறு, பூங்கொடி கடல் நகர்க்குச் சென்று, சொன்மழை பொழிந்து, கயவர் வீசிய கல்லடி பட்டும் அஞ்சாது பணிபுரிந்தனள். இடைவிடாப் பணியால் திருந்திய மாந்தர்தம் வேண்டுகோட்கிணங்கிப் பூங்கொடி கட்ல் நகரிலே தங்க, தாமரைக்கண்ணி மட்டும் மீண்டனள். அந்நகருக்கு வந்த இலக்கியர் என்னும் காவலர், பூங்கொடியைக் கண்டு, தம் முன் வரலாறுரைத்து, அவளுக்கு ஊக்கமூட்டித் திருக்குறட்குத் தெளிவுரையும் கூறி, விடை கொண்டனர்.

தாமரைக்கண்ணி இரண்டாம் முறையும் கடல்நகருக்கு வந்து, பூங்கொடிபால் கோமகன் செய்யும் தமிழ்ப்பணியுரைத்துப் பன்மொழிப் பயிற்சி பெறப் பணித்து, எழுச்சியூட்டித் தொல்காப்பிய விளக்கம் மொழிந்து, மீண்டனள். பூங்கொடி அந்நகரில் தங்கியிருக்கும் பொழுது, தமிழேடுகள் தேடித் தொகுக்கும் பணியை மேற்கண்ட நாவலூர் அமுதம் என்னும் மூதாட்டி, _ஆங்கு வந்து, இவளே வாழ்த்திப் பாராட்டிக் கலைமகள் நிலையிலிருந்து தான் பெற்ற இசையுங் கூத்துங் கூறும் இருபெருஞ் சுவடிகளை ஈந்தனள். பூங்கொடி மகிழ்ந்து வணங்கிச் சுவடிகளுடன் தாயகம் மீண்டனள்.

மீண்ட பூங்கொடி மலையுறையடிகளிடம் நிகழ்ந்தவை கூறி, மீனவன் என்பான் விடுத்துச் சென்ற இருபெருஞ் சுவடிகளையும் நாவலூர் அமுதம் தந்தமையையும் மொழிந்து நின்றனள். அடிகளார் மகிழ்ந்து, மாந்தர்க்கு எழுச்சியூட்ட, மீண்டும் இசைப்பணி புரிய எழுமாறு பணித்துப் பொதுப்பணிக்கு வேண்டும் பண்புகளையும் விளக்கி வாழ்த்தியருளினர். மேலும் அவர் மீனவன் வரலாற்றையும் கூறியருளினர்.

  • “நெல்லூர் என்னும் ஊரில் பொன்னி என்பவள் தன் தந்தையை மீறி வில்லவன் என்பானைக் கலப்புமணஞ் செய்து கொண்டனள். அவள் ஆண் மகவொன்றைப் பெற்று மறைந்தனள். வில்லவன் மனம் நொந்து, குழந்தையை ஒருவரிடம் கொடுத்து, உலகை வெறுத்துச் சென்றுவிட்டான். கற்று வளர்ந்த அவ் விளைஞனே மீனவன். அவன் புரட்சி மனப் பான்மையுடையவனாய் விளங்கினன். ஒரு நாள் சிலரால் தாக்குண்டான். பழமையில் ஊறிய மாந்தர், இவனை வளர்ப்போர்க்குப் பல தொல்லைகள் தந்தனர். தன்னாலன்றாே இத் தொல்லைகள் இவர்கட்கு நேர்கின்றன என எண்ணிய மீனவன் யாரும் அறியா வகையில், புறப்பட்டுக் கூடல் நகரினை அடைந்தான்.
  • கூடல் நகரில் மீனவன் பணிபுரிந்து வருங்கால், அங்கிருந்த தமிழ்ச் சங்கத்தில் இசைச் சுவடியொன்று கிடைக்கப் பெற்றான். அதன் துணை கொண்டு இசை பரப்பும் நாளில், ஏமகானன் என்னும் வடபுலத்திசை வல்லான், தங்கத்தேவன் ஏவலால் மீனவனிடம் வந்து, வடநாட்டிசை பயிலச்சொன்னான். மீனவன் மறுத்து எள்ளி நகையாடி அனுப்பிவிட்டான். வெட்கித் திரும்பிய ஏமகானன். தூண்டுதலால் சீற்றங் கொண்ட தங்கத்தேவன் மீனவனக் கொலை செய்ய முயன்றான். அத் தீமையிற் றப்பிப் பிழைத்த மீனவன், கூடலை விட்டு வேறிடஞ் சார்ந்தனன். எனினும் கொடியோன் ஏவத், தீயோர் சிலர் அவனைக் கொலை செய்து விட்டனர். அவன் இறக்கும் பொழுது இசைச் சுவடியைக் கலைமகள் நிலையத்திற் சேர்க்குமாறு பணித்தனன். அச்சுவடி பூங்கொடி யாகிய நின்பால் வந்துற்றது. இதன் துணையால் மீண்டும் இசைப்பணி புரிக” என அடிகள் உரைத்துச் சென்றனர்.
  • அருண்மொழியும் இசைவு தந்து, இசைச் சுவடியின் விளக்கத்தை எழிலி என்னும் மாதரசியிட்ம் சென்று பெறுமாறு பணித்தனள். பூங்கொடி, எழிலியின் வரலாறறிய விழைந்தனள். அடிகளும் கூறுவாராயினர் : கொடுமுடியில் பிறந்த எழிலி இசைக் துறையில் ஒப்புயர்வின்றி விளங்கினாள். அப்பொழுது புகழ்பெற்ற கூத்தன் ஒருவனைக் கலப்பு மணம் செய்து கொண்டாள். ஒரு சமயம் கூத்தின் பொருட்டு அயல் நாடு சென்று திரும்பும் பொழுது, புயலால் மரக்கலம் உடைய, அருகில் இருந்த ஒரு தீவை அவன் அடைந்தான். தப்பிப் பிழைத்த சிலர், கூத்தன் இறந்தானென்று எழிலியிடம் கூற, அளவிலாத் துன்பம் அடைந்திருந்தாள். தீவினுள் நுழைந்த கூத்தன் அத்தீவின் தலைவன்பால் தன் திறமையைக் காட்டிப் பரிசில் பல பெற்று ஊர் திரும்பினன். திரும்பிய அவனைக் கண்டு எழிலி அளவிலா உவகை எய்தினள். அப்பெருமாட்டியிடம் இச்சுவடியிற் சொல்லிய செய்திகளைத் தெரிந்து கொள்க”
  • என்றனர்.
  • பூங்கொடி எழிலிபாற் சென்று இசை நுணுக்கம் பயின்று யாப்பிலக்கணமும் தெளிந்து, இரு துறையிலும் வல்லவளாக விளங்கினாள். இது கண்டு மகிழ்ந்த அடிகளார் இசைப்பள்ளி ஒன்றனை நிறுவிப் பயிற்றும் பொறுப்பைப் பூங்கொடிபால் ஒப்படைத்தனர். இப்பணி நடைபெற்று வருங்கால் சண்டிலி என்னும் வடபுலத்துப் பெண்ணுெருக்தி இசை பயில வந்தனள்.
  • அவளும் ஆர்வத்தால் அத்துறையில் மேம்பாடடைந்தனள். அவள் முன்பொருகால் தென்னாட்டு மலைவளம் காண வந்து, பொதிகையில் கணவனோடு தங்கியிருந்தனள். அங்கே இசைச் செல்வி ஒருத்தியின் தேவார இசை கேட்டு மயங்கித் தமிழ் இசையை வேட்டுத் தனக்கு அவ்விசையைப் பயிற்றுமாறு வேண்டினள். அவ்விசைச் செல்வி பூங்கொடியிடம் செல்க என ஆற்றுப்படுத்த இங்கு வந்து சேர்ந்தனள். பயின்று முடித்த சண்டிலி இசைப்பணி புரிய வேங்கை நகர்க்கு வருமாறு பூங்கொடியை வேண்டினள். இவளும் இசைந்து அடிகளிடம் ஒப்புதல் பெற்று, வடபுலம் சென்று இசைப்பணி புரிந்தனள்.
  • மண வாழ்வு வெறுத்த பூங்கொடியை நினைந்து வருந்திய வஞ்சி, கோமகனை அடைந்து, அவனைத் தூண்டி, அவனுள்ளத்தே மீண்டும் காம உணர்ச்சியை உண்டாக்கி அவனே வேங்கை நகர்க்கு அனுப்பினள். அவன் இசை பயில்வான் போன்று, பூங்கொடிபாற் சென்று கன் உள்ளக் குறிப்பைப் புலப்படுத்தினன். அவள் அறவே வெறுத்துக் கூறி அனுப்பி விட்டாள். தோல்வியால் கலங்கிச் சினந்து செல்லும் கோமகன் எவ்வாறேனும் இவளை அடைவேன் என வஞ்சினம் கூறிச் சென்றான். அந்நகரில், இசையில் பெரு விருப்பங்கொண்ட பெருகிலக்கிழார் என்பவர் பூங்கொடியின் இசைப் புலமையைக் கேள்வியுற்று அவளுக்கு அழைப்பு விடுத்தனர், அவளுமங சனித்து இங்கு வந்து பலவகை இசையும் பாடி மகிழ்வித்தனள். மகிழ்ந்த அவர், இவள் தன் மகள் போல் இருத்தலான், மேலும் மகிழ்ந்து, வாழ்த்துரை கூறினர். ஆடலிலும் பாடலிலும் சிறந்திருந்து, இறந்து போன தன் மகளைப் போலவே விளங்கும் இவளையும் மகளாகவே கருதிப் பூங்கொடிக்கு உதவ நினைத்தனர். அதன்படி பூங்கொடியின் வேண்டுதலால் மிகப் பெரிய நூலகம் ஒன்று நிறுவ இசைந்தனர்.

இசை பயிலும் சண்டிலியைக் காண வந்திருக்க அவள் கணவனாகிய துருவன், அம்மாளிகையின் ஒரு பால் தங்கியிருந்தனன். அந்நள்ளிரவில் கோமகன் பூங்கொடியின் அறையை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி நடந்தான். இதனைக் கண்டு ஐயுற்ற துருவன், தவறுதலாகச் சண்டிலியின் அறையுட் புகுந்த கோமகனைக் கொலை செய்து விட்டுச் சண்டிலியோடு ஓடி மறைந்தான். பெருகிலக்கிழாரிடம் விடை பெற்றுத்திரும்பிய பூங்கொடி, கோமகன் கொலையுண்டு கிடப்பதைக்கண்டு அஞ்சிப் பதறிக் கிழாரிடம் சென்றாள். கொலைச் செய்தியறிந்த ஊர்க்காவலர் வந்து ஆய்ந்தனர். அப்பொழுது கிழாருடன் பூங்கொடி வர, அவளை ஐயுற்ற காவலர் சிறைப்படுத்தினர். செய்தியிதழின் வாயிலாக இதனை யறிந்த துருவன் சண்டிலியோடு அறமன்றத்திற்கு வந்து, உண்மையைக் கூறி அவளை விடுவித்தான்.

அருண்மொழியும், அடிகளும் பூங்கொடி சிறைப்பட்ட செய்தியறிந்து, ந்து வந்து, அவள் விடுதலை பெற்றதறிந்து மகிழ்ந்தனர். பூங்கொடி, ஒருவர்க்கொருவரை அறிமுகஞ் செய் தாள், கிழார் அருண்மொழி முகத்தை உற்று நோக்கிக் கலங்கி யிருக்க, அடிகளார் அதன் காரணம் வினவினர். அதற்கு அவர், அருண்மொழி முகம் என் கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவூட்டியது என்று சுவரில் மாட்டிய படமொன்றைக் காட்டினர். கிழாரும் அவர் மனைவியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் அது. அருண்மொழி முகமும் அப்படத்திலுள்ள பெண் முகமும் ஒன்று போலிருந்தன, யாவரும் திகைத்தனர். இவள் பெயர் என்ன? என்று அருண்மொழி வினவினாள். பெருகிலக் கிழார் ‘நான் வாணிகத்தின் பொருட்டுக் காழகம் செல்லும்பொழுது கப்பலில் இவளைக் கண்டேன். எங்கள் விழிகள் கலந்தன. பின்பு காழகத்து இசையரங்கில் அவள் இசையைக் கேட்டு மயங்கி னேன். அவளையே மணமும் செய்து கொண்டேன். சில ஆண்டுகளில் பெண் மகவொன்றை ஈன்று உயிர் துறந்தாள். அப்பிரிவுத் துயரைக் குழந்தையின் முகம் பார்த்து மாற்றி வந்தேன். அம்மகளும் கட்டிளம் பருவத்தே காலன் வாய்ப்பட்டனள். என் மனயாள் பெயர் ஏலங்குழலி என்று விடை தந்தனர். இது கேட்டு அலறிய அருண் மாழி, அவள் என் உட்ன் பிறந்தவளே; இளமையில் எங்களைப் பிரிந்தாள்’ என்று முன்னைய வரலாறு உரைத்து, இப்பூங்கொடியும் உங்கட்கு மகள் முறையே ஆவாள்’ என்றனள், அனைவரும் மகிழ்ந்து, சிலநாள் அங்கு உறைந்து, நால்வரும் மணி நகர்க்குப் புறப் பட்டனர். வழியில் கோட்டை நகரில் இறங்கிக் கோனூர் வள்ளலைக் கண்டு மகிழ்ந்தனர்.

கோனூர் வள்ளலின் மாளிகையில் மயில்வாகனரைக் காணும் பேறும் பெற்றனர். அவர் பதினான்கு ஆண்டுகள் ஆய்ந்து எழுதிய யாழ் நூல் ஒன்றனைப் பூங்கொடிக்குத் தந்து, அதன் விளக்கமும் கூறினர். பின்னர், மயில்வாகனர் அறிவுரைப்படி பூங்கொடி அயல் நாடுகள் பலவுஞ் சென்று, தமிழின் சிறப்பை உணர்த்தி, ஆங்காங்குள்ள அறிவியல் நூல்கள் பலவுங் கொண்டு தமிழகம் திரும்பினாள். புதுப்புது நூல்கள் படைத்தாள். தமிழ் மொழி குறித்து எதிர்ப்புரை பகர்வார் பலருடனும் சொற்போர் புரிந்து தமிழுக்கு வெற்றி தேடித்தந்தாள்.

தமிழகத்தே மொழிப் பற்றுடையார் பலரும் கூடி, மாநாடு ஒன்று கூட்டி, மொழி காக்க அறப்போர் தொடுப்ப தென்று முடிவு செய்தனர். அறப்போர் தொடங்கியது. அதனால், அருண்மொழி முதலாகப் பலரும் சிறை ஏகினர். பூங்கொடியும் பொங்கிய உணர்வால், பூரிப்புடன் சிறையகம் புகுந்தனள், சிறையில் அப்பெருமாட்டி நோய்வாய்ப்பட்டாள். நோயின் கொடுமை மிகுதிப்பட, மருத்துவமனைக்கு அவளை எடுத்துச் சென்றனர். அங்கும் நோய் தணிந்திலது. இதனைக் கண்ட அரசு விடுதலை ஆணை பிறப்பித்தது. அவ்வாணை வருமுன், பூங்கொடியின் உயிர் அவள் உடலிலிருந்து விடுதலை பெற்றது

00

(தொடரும்)

கவிஞர் முடியரசன்பூங்கொடி