(பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும் – தொடர்ச்சி) பூங்கொடி – கதைச் சுருக்கம் தமிழகம், எங்கும் விழாக் கோலத்துடன் பொலிந்தது; பொங்கற் புதுநாள் அனைவ்ர் உள்ளத்தையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பகலும் இரவும் கலை நிகழ்ச்சிகள் சிறப் புற்றாேங்கின. ஆனல், அருண்மொழியும் அவள் மகள் பூங்கொடியும் இசையரங்கேற வாராமையால் ஊரார் பலவாறு பேசினர். இதனால் வருந்திய வஞ்சி, தன்மகள் அருண்மொழிக்குத் தேன்மொழி வாயிலாகச் செய்தி கூறியனுப்பினள். மலையுறையடிகளுடைய குறளகத்திற் சேர்ந்த அவள் இத் துறையையே வெறுத்து வாராது நின்றனள். அருண்மொழி தன்…