kurunkathaipoatti01

காட்சி ஊடக நுட்பகத்தின் (Visual Media Technologies)

5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு,

துணுக்கு எழுத்தாளர்’சேலம் எசுகா’ உடன்

இணைந்து நடத்தும்

குறுங்கதைப் போட்டி

இந்தப் போட்டியில் தேர்வாகும் சிறந்த தேர்வாகும் சிறந்த 50 கதைகள் கைப்பேசி இயங்கு தளங்களில் உலகத்தமிழர்கள் காணும் வகையில் கணியனாக (software) உருவாக்கப்படும்.

கதைகளை அனுப்பவும், தொடர்பிற்கும் மின்வரிகள்

murali@visualmediatech.com

yeskha@gmail.com

கதைகள் அனுப்ப கடைசி நாள் : 20.07.2014

முதல் பரிசு : 20 ‘கிராம்’ வெள்ளி நாணயம்

இரண்டாம் பரிசு : 10 ‘கிராம்’ வெள்ளி நாணயம்

மூன்றாம் பரிசு : 5 ‘கிராம்’ வெள்ளி நாணயம்

மூன்று கதைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

விதிமுறைகள்:

கதையின் அளவு வரம்பு 50 சொற்கள் மட்டுமே. மிகுதல் கூடாது.

ஒருவரது ஒரு கதை மட்டுமே போட்டிக்குக் கருதப்படும்.

ஆனால் ஒருவரே எத்தனை கதை வேண்டுமானாலும் அனுப்பலாம். சிறந்ததாகக் கருதுவதைப் போட்டிக்கு என்றும் பிறவற்றைத் தொகுப்பிற்கு என்றும் பிரித்து அனுப்பவும்.

 அகவை வரம்பா? கிடையவே கிடையாது.

உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் (தமிழ் எழுதத் தெரிந்த யாரும்) கலந்து கொள்ளலாம்.

கதைகள் இணையத்தளத்திலோ, வேறு இதழ்களிலோ ஏற்கெனவே வெளிவந்திருக்கக் கூடாது, பிறரது படைப்புகளைக் கவர்ந்தும் அனுப்பக்கூடாது.

போட்டி முடிவுகள் வெளிவரும் வரையில் மற்ற இதழ்களுக்கு அனுப்ப மாட்டேன் என்றும் சொந்தப் படைப்பு என்றும் உறுதி மொழி இணைக்க வேண்டும்.

கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கதைகள் தேர்வு செய்யப்பட்டால் அதன் பதிப்பு உரிமை “காட்சி ஊடக நுட்பகத்தினையே (Visual Media Technologies)” சேரும்.

நகைச்சுவை, அரசியல், காதல், நக்கல், மருமம், என்பன போன்று எந்தப்பிரிவிலும் அனுப்பலாம்.

முடிவு வெளியாகும் வரை இது தொடர்பாக எந்த ஒரு தனிப்பட்ட உசாவுதலையும் தவிர்க்கவும்

http://visualmediatech.com/archives/848