அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் மிகுதியாம்! – க.அன்பழகன்
அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் நாம் பெற்றுள்ளனவற்றிலும் மிகுதியாம்!
அவ்வகையில் தமிழில் பிறந்த சங்கத் தொகை நூல்களின் செய்யுள்களுக்கும், எப்பாலவரும் போற்றும் அய்யன் திருவள்ளுவரின் முப்பாலாம் திருக்குறளுக்கும் முற்படத் தோன்றிய ஒல்காப்புகழ் தொல்காப்பியம் ஓர் ஒப்பற்ற இலக்கண நூலாய்த் திகழ்வதாம். “இலக்கியம் கண்டதற்கென்றே இலக்கணம்” கூறலாகும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அதற்கு முன்னரே தமிழில் தோன்றி வழங்கிய செய்யுள் இலக்கியங்களும் இலக்கண நூல்களும் மிகப் பலவாகும். முத்தமிழும் வளர்த்த முச்சங்கங்களுள், தலை, இடைச் சங்கங்கள் இரண்டின் காலத்திலும் வழங்கிப் பின்னர்க் கடல்கோள் முதலானவற்றால் அழிவுற்ற ஏடுகளின் பட்டியல், இன்று நாம் பெற்றுள்ள தமிழ் ஏடுகளின் எண்ணிக்கையை விடப்பெரிதாகும். தொல்காப்பிய நூலினுள் பல சூத்திரங்களில் சொல்லப்பட்ட செய்தி, முன்னரும் பலரால் சொல்லப்பட்டுள்ளது எனக் காட்ட “என்மனார் புலவர்; என்றிசினோரே” என்று பல இடங்களில் காட்டுவதால் தெளியலாம்.
பேராசிரியர் க.அன்பழகன்:
(கலைஞரின்)தொல்காப்பியப் பூங்கா:
அணிந்துரை: பக்கம் 10
Leave a Reply