ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8)
2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)
இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ “தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கி: யத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை: திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல் லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக அமைந்துள்ளது. இது. ‘தமிழா, சாதியை மற, தமிழை நினை. மதத்தை மற, தமிழை நினை. கட்சியை மற, தமிழை நினை’ என்று, முழக்கமிட்டுத் தமிழுக்கு மாண்பு தேட முயன்ற நடைப் பயணத்தின் நோக்கங்கள், உதவிய பெருமக்களின் பங்களிப்புகள், நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட பட்டறிவுகளை எல்லாம் இந்தப் பாவை நூல் விவரிக் கிறது.
‘கும்பிடும் சாமிக்குக்
கொம்புத் தேன் வானமுதம்
நம்புசெவி பாயா
நடைமுறை ஆகாதோ?
நம் தமிழர் ஆட்சிதுறை
தாங்கும் அலுவலகம்
நம் தமிழ் ஆட்சி
நடைமுறை ஆக்காதோ?
தெம்புநீதி மன்றஉரை
தீந்தமிழ் சொல்லாதோ?
செம்பொருட் காவியங்கொள்
சங்கத் தமிழ்நஞ்சோ?
பம்பிக்கை பார்ப்பார்தம்
பாதகத்தில் வீழ்ந்துகெட்டோம்
நம்பித் தமிழரெல்லாம்
நன்னடைதே ரெம்பாவாய்’
மானமில்லார் நம்மறிஞர்
மாத்தமிழ் வாழ்வெண்ணார்
ஈனமில்லாப் பாவலர்கள்
பாப்புனைத லோடுசரி
ஞானமில்லா மக்களுக்கோ
நாளெல்லாம் கீழ்வழக்கு!
தானமில்லாச் செல்வரிங்கே
தண்டமிழை யாரறிவார்?
மோன மில்லா யோகியர்க்கோ
மூச்சடக்கும் வாசிநிலை
ஆனநிலை ஈதானால்
அன்னைமொழி காப்பார்யார்?
வானமுயர் வையமுயர்
வண்டமிழ்க்குச் சக்தியுண்டு
போனதமிழ் ஆற்றல்பெறப்
பூத்தநடை எம்பாவாய்!”
‘காடு மணக்கும்
கழனியெல்லாம் மணக்கும்
வீடு மணக்கும்
விளைவெல்லாம் பூமணக்கும்
பாடு மணக்குதமிழ்
ஏடெல்லாம் பாமணக்கும்
தேடுபொரு ளெல்லாமே
தெய்வ மணங்கமழும்
ஊடுபொய்கைத் தாமரை நீ
ராம்பல் உளமணக்கும்
கோடு மணக்கும்
கொடையெலாம் மேல்மணக்கும்
நாடு மணக்குதமிழ்
நாடெல்லாம் தெய்வமணத்
தேடு தமிழ்மணக்கும்
பீடுநடை எம்பாவாய்”
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply