கதிரவேலு : kathiravelu

மடலேடு-பன்னாட்டுத்தமிழ்ச்செய்தியாளர்சங்கம் _ madaledu-pannaattucheydhiuudagam

தலைப்பு-கதிரவேலுமரணம் : kathiravelu maranam-thalaippu

 மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு ஐயா மரணமடைந்த செய்தியறிந்து பன்னாட்டுத் தமிழ்ச்செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் வேதனை யடைந்துள்ளோம். ‪

 ஆறுபதின்மங்களுக்கு மேற்பட்ட ஒளிப்பட ஊடகப்பட்டறிவைக் கொண்ட ச.கதிரவேலு ஐயாஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளை தனது ஒளிப்படங்கள் மூலம்வெளிப்படுத்தியவர். தமிழர்கள் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை தனது ஒளிப்படங்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்த முற்பட்டபோது சிறீலங்கா காவற்துறை நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலால் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர்.

  தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளையும் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்கு அண்மித்தநிகழ்வுகளையும் தனது ஒளிப்படக்கருவி மூலம் பதிவுசெய்தவர்.

  ஈழத்தமிழர்களின் முதன்மையான சமய- சமூக- பண்பாட்டு அரசியல் நிகழ்வுகளை ஒளிப்படங்கள் ஊடாக வெளிப்படுத்தியவரும் பதிவுசெய்தவருமான ச. கதிரவேலு ஐயாவின் மரணம் தமிழ்ஊடகத்துறைக்குப் பேரிழப்பு.

 கதிரவேலு ஐயாவின் வரலாற்று முதன்மைத்துவம் வாய்ந்த பதிவுகள் ஆவணமாக்கப்பட வேண்டும். இதற்குப் பன்னாட்டுத் தமிழ்ச் செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் எம்மால் இயன்ற பங்களிப்பினை நல்க  ஆயத்தமாக வுள்ளோம்.

  பணியறிவுடனும் ஆளுமையுடனும் முன்னெடுத்துக்காட்டாகத் திகழ்ந்த மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் ச. கதிரவேலு ஐயாவின் மரணத்தால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.

ஒருமைப்பாட்டுடன்

குகன் தம்பி(ப்பிள்ளை)

செயலாளர்,

பன்னாட்டுத் தமிழ்ச் செய்தியாளர் ஒன்றியம்

www.iataj.org