காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 101-125
– இலக்குவனார் திருவள்ளுவன்
101. இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ?
தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
– பெரியபுராணம்: 2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்: 2. தில்லை வாழ் அந்தணர் நாயனார் புராணம்: 9
102. ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும்.
– பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 16. மூர்த்தி நாயனார் புராணம் : 3
103. சால்பு ஆய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர்
நூல் பாய் இடத்தும் உள;
– பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 16. மூர்த்தி நாயனார் புராணம் : 5
104. மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே; அம் மூதூர்
மெய்ம்மைப் பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மை(ச்)
– பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 16. மூர்த்தி நாயனார் புராணம் : 7
105.வந்து உற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம்
– பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 16. மூர்த்தி நாயனார் புராணம் : 12
106. வல் ஆண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்து
– பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 16. மூர்த்தி நாயனார் புராணம் : 13
107. அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும்
செங்கண் மால் தொழும் சிவன் மகிழ் திரு முல்லை வாயில்.
– பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 20. திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்: 18
109. தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால்
உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்
– பெரியபுராணம்:5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 69
110. மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்பு உற மன்னுக என்று யாவர்க்கும் வியப்பு உற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 74
111. நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் கோமானை
நதியினுடன் குளிர் மதி வாழ் சடை யானைத்
தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி
ஆமாறு நீர் அழைக்கும் அடைவுஇலம் என்று அருள் செய்தார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 93
112. அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 11
113. தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரண்ஆக(க்)
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 117
114. எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்சு எழுத்தும் துதிப்பார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 125
115. சொற்றுணை வேதியன் என்னும் தூய் மொழி
நல் தமிழ் மாலையாம் நமச்சிவாய என்று
அற்றம் முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 126
116. மற்றும் இனையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 135
117. வெம் சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள மஞ்சிவர்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 137
118. தம்பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்:143
119. தெரிவரியபெருந்தன்மைத் திருநாவுக் கரசு மனம்
பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 144
120 & 121. இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல்
பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச்
சொல் நாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 147
122. என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழும் தமிழ் மாலை முன் நின்று பாடுவார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 150
123. வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 155
124. தவம் முன் புரிதலில் வருதொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் இவர் தம் திருவடிவுஅது கண்டு அதிசயம் என வந்து
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 160
125. இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலை பாடிக்
கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 169
Leave a Reply