பம்புளி என மருவிய பைம்பொழில் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

பம்புளி என மருவிய பைம்பொழில்     மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத்…

சேரர் – சொல்லும் பொருளும்: மயிலை சீனி.வேங்கடசாமி

சேரர் – சொல்லும் பொருளும்   இராமாயணக் காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும்போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார்.   கிரேக்கத் தூதரான மெகசுதனீசு என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார்.   திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும்…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 101-125

   – இலக்குவனார் திருவள்ளுவன்   101. இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ? தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் – பெரியபுராணம்: 2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்: 2. தில்லை வாழ் அந்தணர் நாயனார் புராணம்: 9 102. ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும். – பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 16. மூர்த்தி…