காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200: இலக்குவனார் திருவள்ளுவன்
(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175 தொடர்ச்சி)
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200
- செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 24. பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் 8.2
- சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்தி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 25. காரைக்கால் அம்மையார் புராணம் : 43.1
- அந் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம்: 26. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்:41.4
- நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம்: 26. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்: 42.4
- பொங்கு செந்தமிழ்த் திருப்பதிகத் தொடை புனைந்தார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம்: 27. திரு நீல நக்க நாயனார் புராணம் : 32. 3-4
- புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம்: 27. திரு நீல நக்க நாயனார் புராணம் 33.3-4
- வண் தமிழ் செய்தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல் வாய்ப்ப.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 23.4
- அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல,
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 24.3
- சேய பொருள் திருமறையும் தீந் தமிழும் சிறக்க வரும்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 44.3
- மல்லல் நெடுந் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்பப்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 75.2
- கூறும் அருந்தமிழின் பொருள் ஆன குறிப்பு ஓர்வார்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 85.4
- இன் இசை ஏழும் இசைந்த செழுந் தமிழ் ஈசற்கே
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 89.1
- ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 104.3
- ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல் தொடை மாலை நவிலல் உற்றார்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 114.4
- முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 125.1
- திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 127.2
- தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 129.4
- சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 141.3
- அம்மானைக் கும்பிட்டு அருந்தமிழும் பாடினார்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 167.4
- உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 179.4
- துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங் குரு வேந்தர்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 180.3
- தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 182.2
- தாழ்ந்து எழுந்து முன் ‘முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்த் தொடை சாத்தி
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 183.1
- பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவு உற்றுப் பரவு சொல் தமிழ் மாலை
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 184.3
- உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான்’ என ஊத.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 223.4
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply