கிண்டில் தளத்தில்  ‘வெருளி அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி?

நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் நூலை இலவயமாகவே படிக்கலாம். உங்கள் கிண்டில் குறுஞ்செயலியைத் (Kindle app) திறந்து அதில் இலக்குவனார் திருவள்ளுவன் என்றோவெருளி அறிவியல் Science of Phobia) என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும். அந்தப் பக்கத்தில் உள்ள இலவயமாகப் படித்திட   /  Read for Free பொத்தானை அழுத்தி நீங்கள் இலவயமாகவே நூலைப் படிக்க முடியும்.

கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைப் பணம் கொடுத்து வாங்கிக் கிண்டில் வழியாகப் படிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ன :

1) இதோ இந்த இணைப்பைத் தொடுங்கள் – https://amzn.to/2PYD4T2.

2) இப்பொழுது வரும் பக்கத்தில் உள்ள  ஒரு சொடுக்கில் இப்பொழுது வாங்குக / Buy Now with 1-Click எனும் பொத்தானை அழுத்துங்கள்.

3) உள்நுழையும் வாய்ப்பு. (Log in செய்ய) வரும். உங்கள் அமேசான் கணக்கில் நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கிறீர்களோ அந்த மின்னஞ்சல் முகவரி அல்லது எந்தக் கைப்பேசி எண்ணைக் கொடுத்திருக்கிறீர்களோ அந்த எண் – இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்துக் , கடவுச்சொல்லையும் (password) கொடுத்தால் உள்நுழைந்து விடலாம்.

4) அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பற்று அட்டை (Credit Card), பண அட்டை (Debit Card), இணைய வங்கிச் சேவை (Net Banking), அமேசான் இருப்புத் தொகை (Amazon Pay Balance) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நூலை வாங்கிக் கொள்ளலாம்.

5) இப்பொழுது கூகுள் செயல்புரி மண்டிக்குள்(Play Store) சென்று கிண்டில் குறுஞ்செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவி, மேலே சொன்னபடி உங்கள் அமேசான் கணக்கு விவரங்களைக் கொடுத்து உள்நுழைந்து விட்டால் அதில் உள்ள நூலகம்(Library) எனும் பிரிவுக்குள் சென்று நூலைப் படிக்கலாம்.

கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் உறுப்பினராக இல்லாவிட்டால் கூட இலவயமாக இந்த நூலைப் படிக்க முடியும். அதற்கு நீங்கள் இதுவரை அந்தத் திட்டத்தில் ஒருமுறை கூட இணையாதவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பின்வரும் வழிமுறைகளில் நீங்கள் பார்க்கலாம்.
1) கிண்டில் வரையிலி(unlimited)   உறுப்பினர்களுக்காக மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளில் 3ஆவது படிநிலைக்கு வந்ததும் விலைதராமல் படித்திட  / Read for Free பொத்தானை அழுத்த வேண்டும்.

2)  இப்பொழுது கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் இணைவதற்கான பக்கம் வரும். அதில் உள்ள கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் சேருக  / Join Kindle Unlimited எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.

  3) உள்நுழைய (Log in செய்ய) கேட்கும். மேலே கூறியபடி உங்கள் அமேசான் கணக்கின் விவரங்களைக் கொடுத்து உள்நுழைய வேண்டும்.

4) இப்பொழுது வரும் பக்கத்தில் உங்கள் பற்று அட்டையையோ (Credit Card) ICICI, சிட்டி வங்கி, கோடக்கு ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றின் பண அட்டையையோ (Debit Card) பயன்படுத்தி உரூ.2/- செலுத்தினால் அடுத்த ஒரு மாதத்துக்கு நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் உள்ள நூல்களை இலவயமாகப் படிக்கலாம். அந்த வகையில் இந்த நூலையும் படிக்கலாம்.

5) முதன்மைக் குறிப்பு! இதைச் செய்து முடித்தவுடன் பணம் செலுத்தப் பயன்படுத்திய அட்டையைக் கணக்கிலிருந்து நீக்கி விடுங்கள். இல்லாவிட்டால் மாதந்தோறும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.169/- தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். அட்டையை நீக்குவது எப்படி என்பதை அறிய இந்தக் காணொலி உதவும்

<  https://www.youtube.com/watch?v=r-7KIw3tG74. >

நண்பர்களே! இந்தப் போட்டியைப் பொறுத்த வரை எந்தெந்த நூல்கள் மிகுதியாக விற்பனையாகி, நிறைய கருத்துரைகளையும் நல்ல தரக்குறியீடுகளையும் (Ratings) பெறுகின்றனவோ அந்தச் சில நூல்கள் மட்டும்தான் நடுவர்களால் பரிசீலிக்கப்படும். எனவே போட்டியின் கடைசி நாளான 31.12.2019-க்குள் படித்து விட்டு உங்கள் கருத்துகளையும் தரக்குறியீடுகளையும் மறவாமல் அளிக்க வேண்டுகிறேன்!

கருத்தும் தரக்குறியீடும் அளிப்பது எப்படி?


மேலே உள்ள https://amzn.to/2PYD4T2 இணைப்பு வழியாகப் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் பதிப்புரை மதிப்புரை எழுதுக  / Write a product review என ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்கு நூலைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்தலாம். சில நொடிகள் காத்திருந்தால் அளிக்கப்பட்டது  / Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.

பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி, அதன் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி முடிவில் உள்ள அளி/ Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துகளும் பதிவாகி விடும்.

சில நேரங்களில், கருத்துகளை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய இயல்கிறது.  ஆங்கிலத்தில் பதிய விரும்பாதவர்கள்வெறும் தரக்குறியீடு மட்டும் அளித்து உதவலாம்.

அன்பர்களே! பல ஆண்டுகள் உழைப்பில் மலர்ந்த நூல் இது! தமிழ் அறிவியல் துறைக்கு இன்னோர் அணி சேர்க்கும் இந்த முயற்சியைத் தமிழ் மக்கள் கட்டாயம் கைவிட மாட்டீர்கள் எனும் நம்பிக்கையுடன் வெளியிடப்பட்டுள்ளது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!

நிறைகளைத் தளத்தில் பதியுங்கள்!

நிறைகாண வேண்டிய குறிப்புகளை ஆசிரியரிடம் தெரிவியுங்கள்!

மறந்து விடாதீர்கள்! போட்டியின் கடைசி நாள்: திசம்பர் 31, 2019. அதற்கு முன் படித்துக் கருத்தளித்து விட வேண்டுகிறோம்.

மிகுந்த நன்றி.