cyphercrime

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக்

குறிவைக்கும் குற்றக் கும்பல்

  நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் குற்ற(மாபியா)க் கும்பலைக் கைது செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

  நாகப்பட்டினம் மாவட்டம் தற்பொழுது ஆள்கடத்தல், சிறார் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல் போன்றவற்றையெல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவிற்குப் புகழ்பெற்று விளங்குகிறது இணையத்தளத்தைப்பயன்படுத்தி, மிரட்டுவதன் மூலம் மூலம் குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்து வருகிறது குற்றக்கும்பல். 4 அல்லது 5 பேர் இணைந்து இந்தத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதலீடு கணிணியும் அதில் படங்களை மாற்றுருவாக்கும் திறனும் போதுமானது. இந்தக்கும்பல் மிதியூர்தி(ஆட்டோ) ஓட்டுநர்கள், அலைபேசி, குறியட்டை வணிகம் செய்பவர்களுடன் கூட்டுச்சேர்ந்து இத்தொழிலை செய்துவருகின்றது. இக்கும்பல் போலியான இணையத் தள முகவரி, போலியான மின்வரி ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டு குறியட்டை வாங்கும் பெண்களின் ஒளிப்படங்களை எடுத்து அருவருக்கத்தக்க முறையில் ஆணுடன் இணைந்திருப்பது போன்று படத்தை உருவாக்கித் தொடர்புடைய பெண்ணுக்குத் தொலைபேசி மூலம் தகவல் கொடுப்பார்கள். அதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்து மறுமொழி வராவிட்டால் அருவருப்பான படங்களை அப்பெண்ணுக்கு அனுப்பி வைப்பார்கள். அதன்பின்னர் அப்பெண்ணுக்கு மிரட்டல் தொடரும். மிரட்டலுக்கு அஞ்சிப் பணத்தைத் தராவிட்டால் அந்தப்பெண்ணுடைய கணவருக்கு இந்தப் படத்தை அனுப்பி அப்பெண்ணின் வாழ்க்கையைச் சூனியமாக்கிவிடுவார்கள் இது ஒருவகை.

  இதே போன்று நன்கறியப்படும் பத்திரிக்கைகளின் பெயரில் மின்னஞ்சல் உருவாக்கிக் கொண்டு, வணிகர்கள், அரசியல் வாதிகள் ஆகியோர்மீது அவதூறாகச் செய்தி பரப்பிப் பணம் பறிப்பது மற்றொரு வகை. இதன் தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் அந்த மின்னஞ்சல்   அடையாள முகவரியைக் கண்டுபிடித்தால் அது போலியானது என்பது தெரியவரும். இதன் தொடர்பாகக் காவல்துறையில் புகார் தெரிவித்தால்   கணிசார் குற்றப்பிரிவில் புகார் கூறுங்கள் என்பார்கள். கணிசார் குற்றப்பிரிவு சென்னையில் உள்ளதால் யாரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை. இதனால் இந்தக் குற்றக்கும்பல் குளிர்விட்டுப் போய்த் தொடர்ந்து இவ்வாறு மிரட்டிப் பணம் பறித்து வருகிறார்கள்.

  நாகப்பட்டினம் சர்.அகமது தெருவில் அலைபேசிக் கடை வைத்திருப்பவர் தோனி. இவர் கடையில்   அலைபேசிக் குறியட்டை விற்பனை, பாடல்கள் பதிவிறக்கம் செய்துதருதல், பாட்டுப்பதிவுசெய்துதருதல், அலைபேசி பழுது பார்த்தல், அழைப்பொலி(ரிங்டோன்) அமைத்துக் கொடுத்தல் போன்ற தொழில் செய்து வருகிறார். இவர் கடையில் அலைபேசி பழுது பார்க்க நிரோசா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் தன்னுடைய அலைபேசியைக் கொடுத்துள்ளார். அந்த அலைபேசியைப் பழுது பார்த்த தோனி. தன்னுடைய தொழில்நுட்ப அறிவைப்பயன்படுத்தி அந்த அலைபேசியில் உள்ள எண்களைப் பதிவு செய்து கொண்டு, அருவருப்பான படத்தை உருவாக்கி அவருக்கு அனுப்பிப் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்தப்பெண் பணம் தரமறுக்கவே, அப்பெண்ணின் கணவருக்கும் அவரது உறவினருக்கும் அந்தப்பெண்ணை இணைத்து அருவருப்பான படத்தைப் பதிபேசி (வாட்சப்) மூலம் அனுப்பி உள்ளார். அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் அந்தப்பெண்ணுக்கும் எனக்கும் நீண்டநாள் உறவு உள்ளது எனக்கூறி அருவருப்பான சொற்களாலும், அருவருக்கத்தக்கவகையிலும் அந்தப்பெண்ணை இழிவாகப் பேசி மிரட்டியுள்ளார். அவருடைய கணவர் பதறியடித்து வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துவிட்டார். தற்பொழுது அவர்கள் குடும்பத்தில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. இதன் தொடர்பாகத் தமிழக முதல்வர் வரை புகார் உள்ளது.

  தோனி பயன்படுத்திய அலைபேசி எண்கள்   8122747213, 8220338812, 9965675347. இவை போன்று மேலும் பலவித எண்களையும் பயன்படுத்தி இந்த மிரட்டல்தொழிலைச் செய்து வருகிறார். இந்த எண்களில் இருந்து எந்தெந்த எண்களுக்கு பேசியுள்ளார் என்று ஆய்வு மேற்கொண்டால் பலதிடுக்கிடும் உண்மைகள் வெளியே வரும்.

  இதே போன்று முரசுஓசை.காம் என்ற போலியான இணையத்தளத்தை உருவாக்கி குற்றக்கும்பல் இதழாளர்கள், சமூகத் தொண்டர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் மிரட்டிப் பணம் சம்பாதித்து வருகிறார். இதன் தொடர்பான புகார் தமிழக முதல்வர் பிரிவு முதல் கணிணிக்குற்றப்பிரிவு வரை அனுப்பியும் நிலுவையில் உள்ளது.

  தற்பொழுது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளாடைக் குற்றவாளிகள் பணம் சம்பாதிப்பதோடு மட்டும் அல்லாமல் பல குடும்பப் பெண்களைக் குறிவைத்து வாழ்க்கையைச் சீரழித்து வருகிறார்கள். எனவே காவல்துறையினர் தனிப்படை அமைத்து இந்தக் குற்றக்கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு.

vaikaianeesu_name