சுந்தரச் சிலேடைகள் 8 : பல்லியும் காதலியும்
சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 8
பல்லியும் காதலியும்
உடலுயிர் கால்வைத்தே ஊர்ந்தோடும், வாழ்தல்
திடங்கொண்டு முத்தமிடத் தீம்புண்.-விடமுண்டாம்
சத்தமிட்டு முத்துருட்டும் சங்கச் சிரிப்பாலே !
உத்தமிக்குப் பல்லியுநே ரொப்பு.
பொருள்:
காதலி:
1)நம் மனத்தில் உடலில் ஒன்றாகி நினைவுகளில் இனிக்க அங்குமிங்கும் ஓடுவாள்.
2) முத்தம் கடுமையானால் உதடுகள் புண்ணாகும்.
3) காதல் விடத்தால் நோய்தருவாள் ; உயிரைக்கூட எடுப்பாள்.
4) அவள் சிரிப்பு முத்துக்களை உருட்டிவிட்டதுபோல் இருக்கும்.
பல்லி:
1) சுவரில் இங்குமங்கும் ஓடும்.
2) பல்லிகள் வாயிலிருந்து வரும் உமிழ்நீரானது நம்மை முத்தமிட வாய் புண்ணாகும்.
3) விடம்கொண்டது.
4) பல்லியின் சத்தம் முத்துகள் உருண்டோடுவதுபோல் இருக்கும்.
Leave a Reply