55puthiyapaarvai_ilakkuvanar

தமிழறிஞர்களில் முதல்வர் இலக்குவனார்

*முதன்முதலாகத் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோ விழா, ஔவையார் விழா, தமிழ் மறுமலர்ச்சி விழா என ஐந்து விழாக்களைத் தாம் பணியாற்றிவந்த கல்விநிறுவனங்களில் நடத்தித் தமதுமாணவர்களுக்கு மட்டுமன்றி அவர்தம் பெற்றோர்களுக்கும் தமிழுணர்வெழுச்சியைஊட்டியவர் இலக்குவனார் அவர்களேயாவர்.

*தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு வழங்கிக் கொண்டிருந்த நிலையை மாற்றி “உளேன் ஐயா” என்று தமிழில் கூறும் வழக்கத்தைக் கொணர்ந்தவர் இலக்குவனாரே.

*மக்கள்மன்றத்தில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வண்ணம் தந்தை பெரியார் எழுச்சியுடன் 1948-ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் மாநாட்டுக்குப் பின் 1949-ஆம் ஆண்டு சிறப்புமிக்க திருக்குறள் மாநாட்டை நடத்தியவர் பேராசிரியர் சி.இலக்குவனார்.

*தாம் பணியாற்றிய இடங்களிலெல்லாம் அவரது தமிழ் எழுச்சியைத் தாங்கிக் கொள்ள இயலாத கல்லூரிப் பொறுப் பாளர்களால் பணிநீக்கம் செய்து ‘துரத்தப் பட்டவர்’ பேராசிரியர் சி.இலக்குவனார்.

*எத்தகைய சூழலிலும் மனவுறுதியுடன் தமிழியக்கப்பணியே தமது தலையாய பணியெனக் கொண்டு தொண்டாற்றி னார். தாம்பணியாற்றச் சென்ற இடங்களிலெல்லாம் தமிழ் அமைப்புகளை நிறுவியும் இதழ்களை வெளியிட்டும் தமிழ்ப்பணியே தம் மூச்சாகக் கொண்டு இயங்கினார்.

*அவர் நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரி முதல்வராக இருந்தபோது திருக்குறள் நூலை யானை மேலேற்றி யானையின் பின்னர்த் தேசிய மாணவர் படையை அணிவகுத்துவரச் செய்து அந்த அணிவகுப்பின் பின்னர் ஏனைய மாணவர்களையும் ஆசிரியர்களையும் நகரில் வாழும் பெருமக்கள் அனைவரையும் ஊர்வலமாக ‘நகர்வலம்’ வரச் செய்தார்.

*“தொல்காப்பியம்,திருக்குறள் இரண்டும் தமிழரின் இரு கண்களாகக் கருதிப் போற்ற வேண்டும்’ என்னும் குறிக்கோளைப் பரப்பினார்.

*தொல்காப்பியம் முழுமையும் ஆங்கிலத் தில்மொழிபெயர்த்துத் தமது ஆய்வுரை யுடன் நூலாக வெளியிட்டார்.உலக அறிஞர்களின்கவனத்தைக் கவர்ந்த அம் மொழிபெயர்ப்பு தொல்காப்பியத்தை மட்டுமன்றிச் சங்கஇலக்கியமரபுகளையும்  அயல்நாட்டார்அறிந்துகொள்ளத் துணை புரிந்தது;துணையாகவிளங்கிவருகிறது.

*தமிழின எழுச்சிக்குத் தந்தை பெரியாரையும்  தமிழ்மறுமலர்ச்சிக்கு மறைமலையடிகளையும் தமது இருபெரும் தலைவர்களாகக் கருதி இயங்கியவர் இலக்குவனார்.

*தன்மதிப்பு இயக்கத்தின் (சுயமரியாதைஇயக்கத்தின்) தொடக்கம் முதல் பெரியாரியத்தில் பெரும்பற்றுக் கொண்டு அதன்செயல்பாடுகளில் முனைந்து ஈடுபட்டார்.

பள்ளிப் பருவத்தில் அவரது ஆசிரியர் சாமி.சிதம்பரனார் அவர்களின் வழி காட்டுதலே அவரைத் தன்மதிப்பு இயக்கத்திலும் தமிழியக்கத்திலும் ஈடுபடுத்திக் கொள்கைசார்ந்த குறிக்கோள்மிக்க போராளியாக மலரச் செய்தது..

*திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப்புலவர் வகுப்பில் சேரவேண்டுமென்பதே அவர் பள்ளிப்பருவ விழைவாக இருந்தது.அங்ஙனம் விரும்பிச் சேர்ந்தவர் அக் கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்தபி.சா.சுப்பிரமணிய சாத்திரியார் தொல் காப்பியம் வடமொழி நூல்களின் வழி நூலாகஅமைந்தது என வகுப்பில் கூறும் போது அக் கூற்றை வன்மையாக மறுப்பார்இலக்குவனார். தமது ஆசிரியர் மட்டுமல்லர் -கல்லூரியின் முதல்வருமாயிற்றே என அவர் எந்நாளும் தயங்கிய தில்லை.

சுருங்கச் சொன்னால் இலக்குவனாரின் தமிழ்உரிமைப் போர் அவரது கல்லூரிப் பருவத்திலேயே – வகுப்பறையிலேயே-தொடங்கிவிட்டது எனலாம்.

52puthiyaparvai_ilakkuvanar_chirappithazh01

தரவு : கேசவன்