கருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன்

41. அதிர்வுக்கோல்மானி – vibrating reed meter  [ அதிர்வுக்கோல்மானி: இயற்கையான அதிர்வு நிகழ்வெண்களுடைய கோல்களைப்பயன்படுத்தும் ஒரு வகை நிகழ்வெண்அளவுமானி. ( ம.660)]

42. அதிர்வுமானி – vibrometer / vibration meter   :     அதிர்வு அலைவீச்சுகளை அளவிடும் கருவி.

43.  அதிர்வுவரைவி – vibrograph : அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவி.

44.  அமிழ்த்தளவி – dip guage

45.  அமிழ்வு ஒளிவிலகல்மானி – immersion refractometer

46. அமிழ்வு மின்னணு நுண்ணோக்கி – immersion electron microscope

47.  அமுக்கக்குழல் உலவை மானி – dines anemometer : வில்லியம் என்றி இடைன்சு (William Henry Dines) என்னும் அறிவியலாளரால் படைக்கப்பட்ட காற்றுவேகமானிக்குழல். இதனைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலவை மானி. பயன்பாட்டுமுறையில் அமுக்கக்குழல் உலவை மானி எனலாம். காற்று உலவுவதால் அதற்கு உலவை என்று பெயர். 

48.  அமுக்கமானி – piezometer/piesimeter :    பாய்மங்கள் அல்லது திரவங்களின் மீதான அழுத்தத்தை அளவிடுவதற்கான அளவு கருவி. (ம.481) ; பாய்மஅழுத்தமானி (venturi meter) என வேறு கருவி உள்ளதால், பொருட்குழப்பம் வரும்.  ம.க.பே. அழுத்தத்தைத் தோலுணரும் கூருணர்வை அளக்கும் கருவி என்கின்றது. நீர்ம அழுத்தமானி, அழுத்தஅளவி, கம்ப அழுத்த அளவி, நிலத்தடி நீரழுத்த அளவி எனத் துறை அகராதிகள் வெவ்வேறாகக் கூறுகின்றன. பாரோ மீட்டர்(barometer), மனோமீட்டர்(manometer), பொடேன்சியோமீட்டர் (potentiometer), பிரசர் காகு(pressure gauge), டென்சினோ மீட்டர்(tensiometer), டோனோ மீட்டர்(tonometer) என அழுத்தம் தொடர்பான பலவற்றையும் அழுத்தமானி என்றே கூறுகின்றனர். குழப்பத்தைத் தவிர்க்க -நிலையான நீர்ம அமுக்கத்தை(அழுத்தத்தை) அளவிடப் பயன்படுவதால் – அமுக்கமானி எனலாம்.

49.  அமெரிக்கக் கம்பியளவி – american wire gauge

50.  அரை நிழல் முனைவுமானி – half shadow polarimeter

51.  அரைக்கோள ஒத்ததிர்வு சுழல் நோக்கி(அ.ஒ.சு.)   – hemispherical resonator gyroscope (hrg) :    கருவி அமைவின் அடிப்படையை ஒத்ததிர்வு என்றும் ஒத்திசைவு என்றும் கூறுகின்றனர். ஒலியதிர்வு அமைவையே குறிப்பதால் ஒலி அதிர்வமைவு எனலாம். எனவே, அரைக் கோள வடிவில் உள்ள சுழல் நோக்கி என்பதால் அரைக்கோள ஒலியதிர்வு சுழல் நோக்கி(அ.ஒ.சு.)   எனலாம்.   

52.  அரைக்கோள வெயில்மானி – hemispherical pyrheliometer

53.  அரைவட்ட மின்மானி – duant electrometer

54.  அலகூடி ஒலியிய நுண்ணோக்கி – scanning acoustic microscope

55.  அலகூடி கதிரியமானி – scanning radiometer

56.  அலகூடி மின்னணு நுண்ணோக்கி – scanning electron microscope : அலகீட்டு (புறஆய்வு) மின்னணு நுண்ணோக்கி (-இ.) என்றும் அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி (-விக்.) என்றும் குறிப்பிடுகின்றனர். அலகூடி மின்னணு நுண்ணோக்கி எனலாம். 

57.  அலகூடிநுண்ணோக்கி -scanning microscope :    மின்னணு ஒளிக்கற்றை உரிய பொருளைப் புள்ளி, புள்ளியாக அலகூடி உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் அலகூடி நுண்ணே்ாக்கி

58.  அலகூடிபுழைவழி நுண்ணோக்கி – scanning tunneling microscope

59.  அலை முனைவாக்க நுண்ணோக்கி – wave polarized microscope

60.  அலைமானி -wavemeter :   வானொலி நிகழ்வெண் கொண்ட மின்காந்தக் கதிர்வீ்ச்சின் அலை நீளத்தை அளக்கும் கருவி. (-மூ.766)

61.  அலைவுநோக்கி – oscilloscope : அலைஅளவுமானி : அலை களை ஒளிப்படச்சுருளில் பதிவுசெய்யக் கூடிய ஒரு கருவி(ம.461), அலைவு காட்டி, அலைநோக்கி, அலைநோக்கிப் பொறி , ஒளிர்வில் கண் சோதனை . எனப் பலவகையாகக் கூறுகின்றனர். அலைவுநோக்கி என்பதுவே பொருத்தமானதாக அமையும்.

62.  அலைவுமானி – oscillometer : நாடித்துடிப்புகளில் ஏற்படும்மாற்றங்களை அளவிடும் கருவி. நாடி மானி எனலாம். உடலியலில் பொருந்தும் இச்சொல் கப்பலியலில் பொருந்தாது. அங்கே, கோணத்தை அளக்கப்பயன்படும் கருவிக்கும் இதே பெயர்தான். கோணமானி என்றால் கோனியோமீட்டர் (goniometer) என்பதைக் குறிப்பதாகும். நாடியின் ஏற்றத்தாழ்வையும் கப்பல் செல்லும்   நீரலையகளின் ஏற்ற இறக்கத்தையும் பொதுவாகக் குறிப்பிடும் வகையில் அலைவுமானி எனலாம். வேறுபடுத்த நினைப்பின் நாடிஅலைவுமானி, கப்பல் அலைவுமானி எனலாம்.

63.  அழுத்த இறக்க வளியழுத்தமானி – pressure-drop manometer

64.  அழுத்த உயரமானி – pressure altimeter

65.  அழுத்த வெப்ப வரைவி – barothermograph

66.  அழுத்தஅளவி – pressure gauge

67.  அழுத்தக்குழாய் உலவை மானி – pressure-tube anemometer

68.  அழுத்தத் தட்டு உலவை மானி – pressure-plate anemometer

69.  அளக்கை உயரமானி – surveying altimeter

70.  அளவிக் குழல் உலவை மானி – pitot-tube anemometer : பிரெஞ்சுப் பொறியாளர் என்றி பிடட்டு (Henri Pitot) 18 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தததே அளவிக்குழல். பிடட்டுக் குழல் என அவர் பெயரால் அழைக்கப்படுவதைக் குறிப்பிட்ட நிலையில் திசைவேகமானியை அளவிட உதவும் குழல் என்பதால் அளவிக்குழல் எனலாம். அளவிக்குழல் பயன்படுத்தப்படும் உலவை மானி இது. 

71.  அளவிடுகைக் கவராயம் – wing compass : சிறைக்கவராயம்(-ஐ) என்பது விங் / wing என்பதன் நேர் பொருளாக இருப்பினும் இங்கே பொருந்தாது. வளைவும் கௌவுகின்ற தன்மையும் உள்ளமையால் வளை கௌவிக் கவராயம் என்றும் வளைவு இணைக்கப்பட்டுள்ளதால் வளைஇணைப்புக் கவராயம் என்றும் சொல்லத் தோன்றுகிறது. எனினும் ஆங்கிலத்தில் உள்ளவாறு தோற்றத்தின் அடிப்படையில் கூறாமல் பயன் அடிப்படையில் – அளவிடுவதற்குப் பயன்படும் கவராயம் என்பதால் -அளவிடுகைக் கவராயம் எனலாம். அளவைக்கவராயம் என்றால் நிலஅளவைத் துறையில் பயன்படும் சர்வே காம்பசு/ survey compass என்பதைக்குறிக்கும்.

72.  அளவுமானி – quantity meter : பாய்மத்தின் அளவை அளவிடும் கருவி.

73.  அளைச்சல் நோக்கி – shuftiscope : வயிற்று அளைச்சல்(வயிற்றுக்கடுப்பு) நோயின் பொழுது உள்ளார்ந்து நோக்க உதவும் கருவி. அளைச்சலின் பொருட்டு நோக்குவதால், அளைச்சல் நோக்கி.

74.  அறுவை நுண்ணோக்கி – operating microscope

75.  ஆடி உறழ்மானி – mirror interferometer

76.  ஆடி மின்கடவுமானி – mirror galvanometer

77.  ஆடிச் சரிவுமானி – mirror clinometer

78.  ஆடித் தொலைநோக்கி – mirror telescope

79. ஆய்வெண்மானி – peg count meter :     மின்தட ஆய்வு எண்ணிக்கை, சுற்றுகள்எண்ணிக்கை, ஆய்வுத் தோல்விகள் எண்ணிக்கை, ஆய்வு முழுமை எண்ணிக்கை, முதலியவற்றைப் பதிவதற்கான கருவி. கடப்பு சுற்று எண்ணி தோல்வி (-இ.) எனக் குறிப்பிடுவது சீர் சொல்லாய் அமையவில்லை. இவை யாவுமே ஆய்வு தொடர்பானவையே. எனவே, சுருக்கமாக ஆய்வெண்மானி எனலாம்.

80. ஆரநறுக்க உறழ்மானி – radial shear interferometer

(பெருகும்)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png– இலக்குவனார் திருவள்ளுவன்