(முன் இதழ்த் தொடர்ச்சி)

– இலக்குவனார் திருவள்ளுவன்

thamizhisaikaruvi6

பிடில் சீனிவாசையர், ‘தமிழிசைதான் தென்னிந்தியாவின் இசை. அது சூரியனைப் போன்றது. மற்ற இசைகளுக்கும்மற்ற மொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பாவம் தமிழிசைக்கு உண்டு. அதனாலேயே தமிழிசை கேடுற்றது. பயிரைக் கெடுக்க வந்த களைகளைப் பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என்று ஆணித்தரமாகக் கேட்டும் பரிதிமாற் கலைஞர் குறிப்பிடும் போலி ஆரியரதமிழிசையைப் புறக்கணிப்பதையே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அனந்தகிருட்டிணசர்மா என்பார்,’ தியாகையர் பாடலகள் இலக்கிய நயம் உடையன அல்ல. தியாகையர் பாடலுக்குத் தமிழர்களாலேயே முதன்மைகொடுக்கப்பட்டடது. அவற்றில் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன” என்று ஆராய்ந்து தெரிவித்ததைப் போன்று பலரும் தியாகையர் முதலான மூவருக்கும் தமிழிசையே வழிகாட்டி என்பதையும் இவர்களுக்கு சீர்காழி இசைவாணர்கள் மூவரே முன்னோடி என்றும் மெய்ப்பித்துள்ளனர். இருப்பினும் முன்னோடி உடைமையாளர்களைப் புறக்கணித்து இரவல்வாணர்களைப் போற்றுவதையே ஒரு கூட்டம் தன் கடமையாகக் கொண்டுள்ளது. எனவேதான், „சென்னையில் திருவையாறு… என்பது போன்று நிகழ்ச்சிகள் நடத்தி இரவல் இசையை வெளிச்சத்திற்குக் கொணர்ந்து மூலஇசையை இருட்டில் தள்ளப் பார்க்கின்றனர்.

திரு.டி.டி.கிருட்டிணமாச்சாரியார், திரு. எசு. வேங்கட்ராமையர் ஆகியோர் இசைக்கலையின் உயர்வைத் தமிழிசை இயக்கம் குறைப்பதாகவும் அருணாசலக் கவிராயர், பாரதியார் முதலியவர்களின் பாடல்கள் இசைக்கலை நயம் உடையன அல்ல என்றும் அவை உணர்ச்சியை எழுப்புவன என்றும் இசைக்கு மொழி தேவையற்றது என்றும் கலையில் மொழிக்கட்சி ஆகாது என்றும் பிதற்றி வந்தனர்.

            பாடற்கலைஞர் எம்.எசு. இராமசாமி ஐயர் தமிழிசை இயக்கத்தில் வகுப்புவாத உணர்ச்சியாவது சாதித் துவேசமாவது கிடையாது” என்று மறுத்தார்.

      ‘கருநாடகச் சங்கீதத்திற்குத் தெலுங்குதான் ஏற்றது” என்பார்களைக் கடிந்து இது ‘மதவெறி பிடித்தவன் என் கடவுள்தான் உண்மையான இரட்சகன் என்று கூறுவது போல இருக்கிறது” என்றார்.

            திரு.வி.இராமசாமி ஐயங்கார்,’ தமிழில் நல்ல இசைப்பாடல்கள் இல்லை என்பார் தமிழ் அறியாதவர்” எனச் சாடினார்.

 

 (தொடரும்)