tree01

தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே!

மொழி மரம் போன்றது. இதன் சொற்கள் இலைகள் போன்றன. ஆண்டுகள் செல்லச் செல்ல பழைய இலைகள் வீழும். புதிய இலைகள் தளிர்க்கும். மரம் அவ்வாறே நிற்கும்.

இதே போன்று தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்று வரை நிலைத்திருக்கின்றது. இவை என்றும் தொடர்ந்து நிலைத்திருக்கும். ஆனால் ஒரு மரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை இதில் தடுக்க இயலாது.

பிற மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகச் சிலவே என்பது குறிப்பிடுதற்குரியது.

–  பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்