திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்
திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4
1.0.0.நுழைவாயில்
“குற்றங்களைப் பெற்றெடுக்கும் நற்றாய், வறுமை” என்பார் கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில். தீமைகளுக்கு எல்லாம் மூல காரணம் வறுமையே [Poverty is the root cause of all evils] என்பது வறுமை பற்றிய ஓர் அருமைப் பொன்மொழி; ஒரு நன்மொழி.
இந்த நூற்றாண்டிலும் வறுமையின் விளைவுகளாகத் தற் கொலைகள், பட்டினிச் சாவுகள், குழந்தைச் சாவுகள், கொடிய நோய்கள் போன்ற பல்வேறு கொடுமைகள் உலகில் சில நாடுக ளில் நிகழ்கின்றன என்பது வெட்கக் கேடு.
2.0.0.வறுமை ஒழிப்பில் திருவள்ளுவரின் பெருமொழிகள்
அலைக்கழிக்கும் வறுமைபற்றித் திருவள்ளுவர் தொலை நோக்குப் பார்வையோடு அன்றே ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றார்.
வறுமை என்னும் பொருள் தரும் சொற்களாக அற்றம், இன்மை, தாழ்வு, துவ்வாமை, நிரப்பு, நல்குரவு, பசி, துனி ஆகியவற்றைக் குறிப்பிட்டதிலிருந்தே, வறுமை பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்வுபற்றி அறியலாம்.
விளவு..? வறுமை ஒழிப்புபற்றித் தெளிவாக — திருத்தமாக — விரிவாக — விளக்கமாக — அழுத்தமாக — ஆழமாக அனைத் துக் கூறுகள்சார் சிந்தனைகளையும் உலகம் தழுவிய உயர்நோக்குடன் உலக நூல் திருக்குறளில் அழகுறப் பதிவு செய்துள்ளார்.
பக்க வரையறை கருதிச் சிற்சில குறட் சான்றுகளே இந்த ஆய்வுக் கட்டுரையில் அளிக்கப்படுகின்றன.
3.0.0.ஆய்வுக் கட்டுரையின் நோக்கு
மேற்குறிப்பிட்ட திருவள்ளுவப் பதிவுகளை எல்லாம் கண்ட றிந்து, வகைதொகை செய்து, அலசி, ஆராய்ந்து உலகிற்கு அறி விப்பதும் அவற்றை வையம் எல்லாம் வாழ்வியல் ஆக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கு.
4.0.0.பொருள் உரை வரைவு முறைமை
இந்த ஆய்வுக் கட்டுரையில் எல்லாக் குறள் அடிகளுக்கும் குறள்களுக்கும் அறிபொருள், அறியப்படுபொரும் எனும் முறைமையில் பொருள்கள் வரையப்படுள்ளன.
5.0.0.அழிக்கும் வறுமையை ஏன் ஒழிக்க வேண்டும்..? குறள்கள் — 10
“என்பு இல் அதனை வெயில்போலக் காயும் [குறள். 77]” வறுமையை — வறுத்தெடுக்கும் வறுமையை ஏன் வேரறுக்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் தரும் காரணங்கள் இங்குக் கூறப்படுகின்றன.
எல்லாக் குறள் அடிகளுக்கும் குறள்களுக்கும் அறிபொருள், அறியப்படுபொரும் என்னும் நிலையில் பொருள்கள் வழங்கப் படுகின்றன.
5.1.0.அக்குறள்கள்:
247,532,552, 1042, 1043, 1044, 1045, 1046, 1047, 1048.
பேராசிரியர் வெ.அரங்கராசன்
முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவிற்பட்டி — 628 502
Leave a Reply