தொலைத்தகவல் (Telematics) பயன்பாடுசிறப்புப் பார்வை 1/3

 

 

முன்னுரை

  உலக நாடுகளின் அறைகூவல்களை(சவால்களை) எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும்   புது உத்திகளைத் தகவல் தொழில் நுட்பத்துறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின்  உயிர்நாடி  தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் பயன்பாடாகும். 2017 மலேசிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலர்ந்த குறள் வெண்பா இணையக்குறளான

உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை

இணையத் தளம்புகுவே மாமகுடம்

(வெண்பா இணையக்குறள், 2017)

எப்படித் தமிழ் இணையமொழியாக களம் புகுந்ததோ அப்படி தொலைத்தகவல் பயன்பாடும் பல துறைகளில் பீடு நடை போட புயலெனப் புறப்பட்டுள்ளது. உலக நாடுகளைப் போலவே மலேசிய நாட்டில் தொலைத்தகவல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது கல்வித்துறையாகும். தொலைத்தகவல் உதவி பல படிநிலைகளில் துணைபுரிகிறது. குறிப்பாக மின்னஞ்சல், கலைக்களஞ்சியம், மின் நூலகம் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

 

தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் (Telematics) நுட்பம்

 பொதுவாகத் தகவல் தொழில்நுட்பம் இரண்டு முதன்மை அடிப்படைக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஒன்று பரந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் தொழிற்துறைக்கு முதன்மை த்துவம் வாய்ந்ததாகவும் மற்றொன்று கணிணி தொலைத்தொடர்பு தொழில்நுட்பமாகவும் உலக மானிட வாழ்க்கைக்கு அரிய சேவைகளை வழங்கி வருகிறது. கணிணி தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் உலகத் தொடர்புத்துறையின் தொலைவைக் குறைத்து பயன்பாடுகளை அதிகரித்திருக்கிறது.

     தொலைத்தகவல் (Telematics) தொழில்நுட்ப மாற்றத்தை அதன் பயன்பாட்டிலிருந்தே உருமாற்றம் செய்துள்ளது. அஃதாவது தொலைபேசியின் ஒலியைக் குரல், தரவுகள், கருத்து, படங்கள் ஆகிய வடிவில் உருமாற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல் கணிணி என்ற பண்பணியை மேற்கொள்ளும் ஓர் இயந்திர வடிவிலான செயலியை இயக்கம், சேமிப்பு, தரவுகள் பயன்பாடு, கருத்துகள், படங்கள், ஒலி ஆகிய கூறுகளைக் கொண்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள துணைபுரிகிறது என்பது தெளிவு. எனவே கணிணியின் இவ்வனைத்துத் தகவல்களும் ஒன்றிலிருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்படுகிறது. இந்தத் தகவல் பரிமாற்றமானது நுண்மின்னணு புத்தாக்கக் கண்டு பிடிப்பாக உருவெடுத்துள்ளது.

இன்றைய தொலைத்தகவல் நுட்பங்கள்

  தொலைத்தகவல் நுட்பங்கள், கல்வி தொலைத்தகவல்(Educational Telematics), வாகனத் தொலைத்தகவல் (Vehicle Telematics) காப்புறுதித் தொலைத்தகவல்  (Insurance Telematics) நல்வாழ்வுத் தொலைத்தகவல்(Health Telematics) மனிதநேயத் தொலைத்தகவல்  (Human Telematics) சமூகத் தொலைத்தகவல்(Social Telematics) என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 கல்வியில் தொலைத்தகவலியல் (Educational Telematics)

   தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு சொற்களின் ஒரு கலவையாக ‘தொலைத்தகவல்’ விளங்குகிறது. [“Telematic is a Telecommunicating combined with informatics, constitutive part of ICT and Emerging Telecommunication and Informatics Application”]

      ஆகவே தொலைத்தகவல், விரிந்த பரந்த உலகில், தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துடன் தேவையான தொலைத்தொடர்புகளின் ஒருங்கிணைந்த பயன்பாடாக மிளிருகிறது. (Telematics technology – Dog pile Web Search.html). உலகக் கல்வித்துறையில் தொலைத்தகவல் என்பது புதிய வரவாகும். கணிணி மூலம் மனிதர்கள் வெவ்வேறு இடங்களில் ஒருவர் ஒருவரோடு, ஒருவர் சிலரோடு அல்லது பலர் பலரோடு தொடர்பு கொள்ளலாம். சில நாடுகளில் அறிமுகம் ஆகியிருந்தாலும் இன்னும் பல நாடுகளில் தொலைத்தகவல் பயன்பாடு மழலைப் பருவத்திலே தவழ்ந்து கொண்டிருக்கிறது.

     ‘’தொலைத்தகவலியல் பயன்பாடு முன்னேற்றமடைந்த அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தகவல் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினாலும் வளரும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளிலோ(மலேசியா, இந்தியா) வகுப்பறைப் பயன்பாட்டில் குறைவான பங்கினையே வழங்குகிறது. இதற்குச் சான்றாக அமைவது பள்ளிகளில் அதிகமாகப் புத்தகப் பயன்பாட்டே கற்றலுக்கு பயன்படுத்தப்படுவதாகும் (கங்காதரன், 2017).

    தொ3/T3, (1999) ஆய்வின்படி தொலைத்தகவல்பயன்பாட்டில் முதன்மைப் பங்கை வகிக்கும் அறிவியல், கணிதம், மொழி ஆகியன சில பகுதிகளாக வகுக்கப்படுகின்றன. அவை முறையே பாட வகை, பயிற்சித் தலைப்பு, ‘தொலைத்தகவல்’ முதல் உருவாக்கம், முதல் உருவாக்க நாடு ஆகியனவாகும்.

 

.கா: 1

கவனம் செலுத்தும் பாடம் பயிற்சித் தலைப்பு தொலைத்தகவல் முதல் உருவாக்கம் முதல் உருவாக்க நாடு
மொழி தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு www._________ இங்கிலாந்து

.கா: 2

தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கான ஆவணம்-தகவல் மையம்(CEDK – Centre of Documentation and information on the child) hppt://www.icc.ominho.pt/cedia

(தொடரும்)

பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் ஆண்டு)

(Pehrarasi Muthukumar)

 மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி 32000 சித்தியாவான்,

பேராக்கு.