நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர் – மு.வை.அரவிந்தன்
நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர்
இளம்பூரணர் உரை ஆழமான தெளிந்த நீரோடை போன்றது; பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உரையுடன் – அருள்பழுத்த நெஞ்சத்துடன் முகம் மலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகின்றது. ஆரவாரமும் பகட்டும் இவர் உரையில் எங்கும் காண்பது அரிது. மிக மிகச் சுருக்கமாகத் தெளிந்த கருத்தைக் கூறி விளங்க வைக்கின்றார். தாம் கருதியதே சிறந்தது என்று எண்ணும் வகையில் இவர் எவ்விடத்திலும் எழுதவில்லை. பிறர் கருத்தை மதித்தலும் புலமை முதிர்ச்சியும் நடுநிலைமையும் உரை முழுவதும் வெளிப்படுகின்றன.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:
உரையாசிரியர்கள்
Leave a Reply