‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’: அணிந்துரை: பழ.நெடுமாறன்

‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ : அணிந்துரை: பழ.நெடுமாறன்           புலவர் சா.பன்னீர்செல்வம் அவர்கள் ‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ என்னும் தலைப்பில் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் கூறிய திசைச் சொல் என்பதின் சரியான விளக்கம் யாது என்பதைச் ‘செந்தமிழா கொடுந்தமிழா?‘ என்னும் தலைப்பிலான கட்டுரை கூறுகிறது.                    செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்                    தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி எனத் தொல்காப்பியர் கூறுவதற்கு இளம்பூரணர், “செந்தமிழ்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36: ம. இராமச்சந்திரன்

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 அங்கதம்   தொல்காப்பியர் காலத்திலேயே அங்கதச் செய்யுள் பாடப்பட்டுள்ளன என்பதை அவர் எழுதிய நூற்பாவினால் அறியலாம். செம்பொருள், அங்கதம் என இருவகையாகக் கொள்வர் தொல்காப்பியர்.105 தொல்காப்பியத்தில் சொல்லப்படும் அங்கத வகை வளர்ச்சி பெறவில்லை என்றே தோன்றுகிறது. எனினும் சில தனிப்பாடல்களிலும் காவியங்களில் மட்டுமே ஆங்காங்கே அங்கதக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. அங்கத வடிவில் அமைந்த திறனாய்வாளர் கூறும் அங்கத இலக்கணங்கள் பொருந்தி நகையும் வினையமும் (irony) இகழ்ச்சிக் குறிப்பும் கொண்டு எழுந்த நூல்கள் மிக அரியனவே….

தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.      இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.      பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார். நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார். இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை…

முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர் – மு.இராகவையங்கார்

முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர்   பிறர் உட்புகுந்து காண முடியா வண்ணம், இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கறையுள் தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்து கிடந்த அரதனக் குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார்; அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கட்டலைத் தம்மதிவலிகொண்டு கடைந்து முதன் முதலில் இலக்கண அமுதம் அளித்த பெரியார். – மு.இராகவையங்கார்: ஆராய்ச்சித் தொகுதி: பக்கம்: 398-399

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் – மு.வை.அரவிந்தன்

இளம்பூரணருக்கு முந்தைய தொல்காப்பிய உரைகள் தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை கண்டவர் இளம்பூரணர் என்று போற்றப்படுகின்றார். ஆனால், அவர் தனக்கு முன் வேறு சில உரைகள் தொல்காப்பியத்திற்கு இருந்ததைப் பலப்பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். பிறர் கருத்தை மறுக்காமல், உள்ளதை உள்ளவாறே சுட்டி மேலே செல்லுகின்றார். ஏனைய அதிகாரங்களை விட, சொல்லதிகாரத்தில் பல இடங்களில் இவர் பிறர் உரைகளை மிகுதியாகக் குறிப்பிடுகின்றார். ‘என்ப ஒருசாரார் ஆசிரியர்’ (44,57), ஒருவன் சொல்லுவது (4,18, 25, 38, 44), ஒரு திறத்தார் கூறுப (1, 56, 58),…

தமிழ் நெஞ்சம் கொண்ட இளம்பூரணார் – மு.வை.அரவிந்தன்

தமிழ் நெஞ்சம் கொண்ட இளம்பூரணார் பிறர்கருத்தை மதித்தலும் புலமை முதிர்ச்சியும் நடுநிலைமையும் உரை முழுவதும் வெளிப்படுகின்றன. இளம்பூரணர்த் தமிழ்க்கடலுள் பலகால் மூழ்கிதீ திளைத்தவர்; தமிழ் மரபு நன்கு அறிந்த சான்றோர். இவரது தமிழ் நெஞ்சம் பல இடங்களில் வெளிப்படுகின்றது. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.146

நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர் – மு.வை.அரவிந்தன்

நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர்   இளம்பூரணர் உரை ஆழமான தெளிந்த நீரோடை போன்றது; பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உரையுடன் – அருள்பழுத்த நெஞ்சத்துடன் முகம் மலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகின்றது. ஆரவாரமும் பகட்டும் இவர் உரையில் எங்கும் காண்பது அரிது. மிக மிகச் சுருக்கமாகத் தெளிந்த கருத்தைக் கூறி விளங்க வைக்கின்றார். தாம் கருதியதே சிறந்தது என்று எண்ணும் வகையில் இவர் எவ்விடத்திலும் எழுதவில்லை. பிறர் கருத்தை…