நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்!

நானிலம் சிறக்கட்டும்!

 

  2017 ஆம் ஆண்டுப் பிறப்பிற்கு அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 

தமிழ்நாட்டில் புதிய அரசு மலர்ந்துள்ளது!

 

ஆளுங்கட்சியிலும் புதிய தலைமை மலர்ந்துள்ளது!

 

எதிர்க்கட்சியிலும் புதிய தலைமை மலர உள்ளதாகக் கூறப்படுகிறது!

 

இவற்றால் தமிழ்நாட்டில் புதிய மலர்ச்சி ஏற்படட்டும்!

 

    பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

        அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து   (திருவள்ளுவர், திருக்குறள் 738)

என்பதற்கேற்பப் பசிப்பிணியும் பிற நோயும் இல்லா வாழ்வும், பொருட்செல்வம், அறிவுச் செல்வம் நிறைந்தும்,  இன்பமும் பாதுகாப்பும்  சிறந்தும் நம்நாடு சிறக்கட்டும்!

ஆங்கிலவழிக்கல்விக்கும் செயற்கையான வேளாண்மைக்கும் முற்றுப்புள்ளி இடட்டும்!

அப்பாவி எழுவர்  முதலான  நீண்டநாள் சிறைவாசிகள் விடுதலையாகட்டும்!

சிங்கள இலங்கையரால் அடிமைப்படுத்தப்பட்ட தனியாட்சி செய்து வந்த தமிழீழம் விடுதலையாகட்டும்!

ஈழத்தில் தமிழினப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களும் துணை நின்றவர்களும் தண்டிக்கப்படட்டும்!

உலகெங்கும் நிகழும் வன்முறைகளும் இனப்படுகொலைகளும் இல்லாமல் ஒழியட்டும்!

உலக மொழிகளின் தாயான தமிழ், தமிழ்நாட்டிலும் பிற நாடுகளிலும் தழைக்கட்டும்!

தமிழர்கள் எங்கும் முதன்மை பெறட்டும்!

அனைவர் வாழ்விலும் துன்பம்  தொலையட்டும்! இன்பம் நிலைக்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 

இதழுரை அகரமுதல 167,  மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017