(ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி)

51lanterndance02

19.  சீன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள்

  ஓர் மாலைவேளையில், சியான் நகரத்தின் சான்சி இசைப்பள்ளியின் பூங்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டகாட்சி என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. சற்றொப்ப 200 – 300 பேர் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஓர் சீனப்பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். அந்த நடனத்தை நெற்தளிர் நாட்டியம் [யாங்கே -Yangge (秧歌)] என அழைக்கின்றனர்.

 51yaange-ricesprout-dance01

சீனாவின் நடனக்கலை என்பது, சீனமக்கள் தம் அறுவடைக்காலத்திலும், வேட்டையாடும் காலத்திலும், அவர்களது முன்னோர்களை வழிபடும் காலத்திலும் என ஒவ்வொரு காலத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

 51lanterndance04fu xi

 குத்தீட்டி நடனம்(அர்பூன்- Harpoon) என்றொரு நடனம் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் சிறப்பாக ஆட்சிசெய்ததாக சொல்லப்படும் புசி [Fu Xi(伏羲)]. என்ற மன்னர்தான், மீன்பிடி வலைகளையும், வேட்டையாடும் முறைகளையும் மனிதகுலத்திற்கே அறிமுகப்படுத்தியவர் எனச் சீன அன் தேசியஇனத்தவர்கள் பெருமையுடன் பறைசாற்றுகின்றனர். அவரைத் தெய்வமாக வழிபடும் வகையில், அவரது நாட்டின் பல ஊர் மக்கள் குத்தீட்டி(அர்பூன்) நடனத்தை ஆடிவந்தனர். அதேபோல, வேளாண்மைக் கடவுள் எனச் சென்னாங்கு (Shennong) என்றொரு கடவுளை வணங்கி ஏர் நடனம்  (Plough) என்றொரு நடனமுறையைக் கடைப்பிடித்து வந்தனர்.

   இவ்வாறு, ஒவ்வொரு பருவகாலத்திலும் ஒவ்வோர் அரசர் காலத்திலும் சிறந்து விளங்கிய துறைகளைச் சார்ந்து, பல புதிய நடனக்கலைகள் சீன அன் தேசிய இனத்தில் வளர்ந்துவந்துள்ளன.

 51lanterndance03 51lanterndance04

 வடக்குச்சீனாவின் பல பகுதிகளைச் சாங்கு பேரரசு ஆண்டுகொண்டிருந்தபோது, அங்குள்ள சிற்றூர் மக்கள் தங்களது இல்லங்களில் அரிசிகுத்தும் போது பல பாடல்களைப் பாடிவந்தனர். அந்தப் பாடல்களை மாலைநேரங்களில் அந்தச் சிற்றூர் மக்கள் இசைத்து, நடனமாடி வந்துள்ளனர். அப்பழக்கம், இன்றுவரை நீடிப்பது மிகவும் வியப்பாக இருந்தது. தெற்குச்சீனாவில் இதேபோன்று,  விளக்கு நடனம் (Lantern Dance) இன்றுவரைநீடிக்கிறது.

  சீனப் புரட்சிக்காலத்தில், பொதுவுடைமைக்கட்சி இந்த மாலைநேர நடனத்தைச் சிற்றூர்ப்புற உழவர்களைத் திரட்டுவதற்குச் சிறப்பாகப் பயன்படுத்தியது. மாவோ அதை யாங்கே இயக்கம் என்ற புதிய பெயரிட்டு வளர்த்தார். பொதுவுடைமைவாதிகள், மன்னராட்சி மரபுகளை உடைத்தெறிபவர்கள் எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும், மன்னராட்சியின் சில நல்ல கூறுகளை இன்றைக்கும் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. அதை மக்களுக்காக நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும் என்ற மண்ணுக்கேற்ற மார்க்சிய அணுகுமுறை மாவோவிடம் இருந்திருக்கலாம். இதன் காரணமாகவே,  இந்த மன்னர் கால மாலைநேர நடனமுறை இன்றுவரை தடைசெய்யப்படவில்லை.

 51.shennong01 51shennong01 51shennong02

 மேலும், மாவோ காலதத்திற்குப் பின் முதலாளியச் சந்தைப்பொருளாதாரம் சீனாவில் தீவிரமாகச் செயலாக்கம் பெற்றவுடன், பெரும் சீன நிறுவனங்களும் பல பன்னாட்டுநிறுவனங்களும் சீனாவில் மிகப் பெரும்அளவிலான தொழிற்சாலைகளை ஏற்படுத்தின. இதில் பணியாற்றும் ஊழியர்கள்,  மிகுந்த வேலைப்பளு காரணமாக மனஅழுத்தம் – மனஇறுக்கம் ஆகிய உளவியல் சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

  இதனைச் சரி செய்யவும், இந்த மாலை நேர யாங்கே நடனமுறை பயன்படும் எனச் சீன அரசு அதை ஒன்றும் செய்யவில்லை. மேலும், இன்றைக்கு அந்த மாலை நேர நடனங்களில், மேற்கத்திய யாசு (Jazz)இசைச் சாயலிலான சீன இசைப்பாடல்களே ஒலிக்கின்றன என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

சீனமக்களின், இன்றைய மேற்கத்திய மோகங்களுக்குத் தடைவிதிக்கும் நிலையில் சீனஅரசு இல்லை. ஏனெனில், சீனஅரசு தனிவல்லாண்மைகளின் கூட்டாளியாகச் சந்தைப்பொருளியலில் கோலோச்சுகிறது. கே.எப்.சி. – பெப்சிமெக்டோனால்டு என வடஅமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள், சீனாவில் நிரம்பி வழிவது வெறும் வணிகம் சார்ந்த குறியீடல்ல. அது தனி வல்லாண்மை நுகர்வுவெறிப் பண்பாட்டுப் படையெடுப்பின் குறியீடு! சீனாவின், சீனத்தன்மை குறைந்துவரும் அதே காலக்கட்டத்தில்தான், வடஅமெரிக்கத்தன்மை இங்கு சீனர்களிடம் வெளிப்படுகிறது. சீனமக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் மிகவும் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய பொதுவுடைமைக்கட்சி, அதில் மிகவும் பின்னடவைச் சந்திருக்கிறது.

 அதேநேரத்தில், பன்னாட்டுநிறுவனங்களும் – சீனப் பெருநிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதால், கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் சீனர்களுக்கு மனஉளைச்சல் – மனஅழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்க, மனமகிழ்வுக்கான ஒரு பொதுவெளியை ஏற்பாடு செய்தாகவேண்டும் என்பதைச் சீனஅரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவே, சீனர்களின் இந்தப் பரம்பரை நடன நிகழ்வு தங்குதடையின்றி நடக்கிறது.

51.chinesedance01aruna