தலைப்பு-வடசொற்கலப்பு இல்லை-பரிதிமாற்கலைஞர் : thaliaippu_irandoruvadasol_parithimalkalaignar

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.

  இனித் தமிழ்ப் புலவர்களாயினார், சற்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.

  அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும் வடசொற்கள் தமிழ் நூல்களிலேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தினுள்ளும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங்காங்கு இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.

 -பரிதிமாற்கலைஞர்:

தமிழ்மொழியின் வரலாறு