மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – மறை. திருநாவுக்கரசு
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம்
சூரியநாராயண சாத்திரியாரிடம் நீண்ட நேரம் பேசினேன்.
விளக்கம்: இவர்தாம் வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார், என்னும் மாபெரும் புலவர், இவர் கிறித்துவக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் ஆவர். அடிகள் தனித் தமிழியக்கம் காண்பதற்கு முன்பே தமது வடமொழிப் பெயரைத் தனித்தமிழிற் பரிதிமாற் கலைஞன்’ என்று மாற்றிக் கொண்டவர். ‘தம் கல்லூரியிற் பணிபுரியத் தேவைப்பட்ட தமிழாசிரியரைத் தேர்ந்து கொள்ள நடைபெற்ற புலமையாளர் தேர்வில் அடிகளைத் தேர்ந்து கொண்டவர். அப்பணியை அடிகளைப் பெறச் செய்தவர். அடிகள்பால் அளவில்லா நட்பு கொண்டவர். புலமைத் தமிழில் உயர்ந்த நடையில் நாடக நூல்கள் சிலவும் எழுதியவர். பேரழகர், முப்பத்து மூன்றாம் அகவையில் மண்ணுலக வாழ்வை நீத்தவர்.
தமிழுணர்ச்சியில் வீறு கொண்ட இவர் தம் அருமை பெருமைகளையும், அடிகளுக்கும் இவர்க்கும் நிகழ்ந்த நட்பின் இனிமைகளையும் எனது நூலில் (மறைமலையடிகள் வரலாறு பக்கம் 20, 21, 22, 23) காணலாம்.
– மறை. திருநாவுக்கரசு
Leave a Reply