மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’ தண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’ விளக்கம்  தண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர்…

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – மறை. திருநாவுக்கரசு

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம்  சூரியநாராயண சாத்திரியாரிடம் நீண்ட நேரம் பேசினேன்.   விளக்கம்: இவர்தாம் வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார், என்னும் மாபெரும் புலவர், இவர் கிறித்துவக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் ஆவர். அடிகள் தனித் தமிழியக்கம் காண்பதற்கு முன்பே தமது வடமொழிப் பெயரைத் தனித்தமிழிற் பரிதிமாற் கலைஞன்’ என்று மாற்றிக் கொண்டவர். ‘தம் கல்லூரியிற் பணிபுரியத் தேவைப்பட்ட தமிழாசிரியரைத் தேர்ந்து கொள்ள நடைபெற்ற புலமையாளர் தேர்வில் அடிகளைத் தேர்ந்து கொண்டவர். அப்பணியை அடிகளைப் பெறச் செய்தவர். அடிகள்பால் அளவில்லா நட்பு கொண்டவர்….

“நாட்டுக்கோட்டைத் தியாகராச(ச் செட்டியா)ர் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ – மறைமலையடிகள்

தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலையடிகளின்  25.10.1937 ஆம் நாள், குறிப்பு .  : ‘‘நாட்டுக்கோட்டைத் தியாகராசச் செட்டியார் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ இதற்கு மறைமலையடிகளாரின் மகனார் மறை திருநாவுக்கரசு தரும் விளக்கம் :  இவரைத் (தியாகராசச் செட்டியாரை) தமிழ்ப் புலவர் என்றே கூறிவிடலாம். புலவர்கள் பால் அன்பும் உதவியுமுடையவர். இன்று தமிழ்நாட்டின் தனிப் பெருஞ்செல்வர் அடிகள் நூல்களை இன்றும் நாடோறுங்கற்கின்றார். மதுரையில், தியாகராசர் கல்லூரியைத் தம் உரிமைப் பொருள் கொண்டு நடத்தி வருபவர். நூல் ஆலைகள் பலவற்றின் உரிமையாளர். சிவநெறியின் பற்றாளர். அறங்கள்…