(முன்னிதழ்த் தொடர்ச்சி)

prapakaran07

  போராளிகள் இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அயலவனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய  ஒப்படைப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம்மகத்தான  ஈகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க  ஆற்றல்களின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். . . . . . .

. . . . . . ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. இன அழிவை இலக்காகக் கொண்ட இனவாத ஒடுக்கு முறையின் உச்சத்தில்,  அயலகப் படையின் அடக்குமுறை  பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்குத் தீவிரைவடைந்த கட்டத்திலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். எமது மக்களின் உயிரைக்காக்கவும், எமது மக்களின் உரிமையை நிலைநாட்டவும், எமது இயக்கம் மேற்கொண்ட ஆயுதம் தரித்தவிடுதலைப் போரை பயங்கரவாதமாகச் சிங்கள அரசுகள் சித்தரித்தன. தமிழரின் உரிமைப்போரைத் திரிபுபடுத்தி, இழிவுபடுத்தி உலகரங்கிலும் நச்சுப் பரப்புரைகள் முடுக்கிவிட்டப்பட்டன. இப் பொய்யானபரப்புரையை நம்பி, பல உலக நாடுகள் எமது அமைப்பிற்குத் தடை விதித்தன. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு உலக அரங்கிலிருந்து நாம் ஓரம் கட்டப்பட்டோம். உலக நாடுகள் ஒன்று திரண்டு எதிரியின் போர்த் திட்டத்திற்கு முண்டுகொடுத்தன. அனைத்து உலகத்தினதும் ஆதரவும், ஆயுத உதவியும் கிட்டியதால்  முரட்டுத்தனம் கொண்ட எதிரி போரைத் தீவிரப்படுத்தினான். நாம் தனித்து நின்று போருக்கு முகம் கொடுத்தோம். மக்களின் ஆதரவு மட்டும் எமக்கு மலையாக நின்றது. நாம் அலையலையாகத் திரண்டெழுந்து  வன்கவர்வுப் படைகளுடன் மோதினோம். போர்க்கலையில் எமது வீரர்கள் படைத்த   பெருமைமிகு அருந்திறல்கள் உலகப் படை வல்லுநர்களையே திகைப்பில் ஆழ்த்தின.

  போரிற்புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்பதனைச் சிங்களத் தேசமும் உலகமும் உணர்ந்து கொண்டன. இந்தச் சூழ்நிலையில்தான், அதாவது எமது போராட்ட வல்லமையை மெய்ப்பித்துத்காட்டி, எமக்குச் சார்பான படைத்துறைச் சமநிலையில் நின்றபடியே நாம்அமைதியின் கதவுகளைத் திறந்தோம்.  அமைதியில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகத்திற்கு உணர்த்திக் காட்டவே நாம்  படைநிலை மேலாண்மை நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம்.

  போருக்கு ஓய்வு கொடுப்பதிலும் நாமே முன்முயற்சிகளை எடுத்தோம். ஒருதலைச்சார்பான  போர்நிறுத்தம் அறிவித்து , அரசாங்கத்தை அமைதி வழிக்கு அழைத்தோம்.

மாவீரர் நாள் உரை 27.11.2002

 prapakaran06

 . . .ஆனால், சிங்கள இனவாத ஆளும்இனம் தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளை மறுத்து, ஒருமிப்புத் தீர்வுகளை எதிர்த்து, ஒடுக்குமுறையைத் தொடருமானால் எமது மக்களுக்கு உரித்தான  தன்வரையறை உரிமையின் கீழ் நாம் பிரிந்து சென்று தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இப்படியான இறுதி  வழிக்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் புறநிலையை உருவாக்கிவிட வேண்டாமென நாம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

  ஒடுக்குமுறையின் கொடுமைகளுக்கு ஆளாகி, குறிக்கோளால் ஒன்றுபட்ட மக்களை எந்தவோர் ஆற்றலாலும் அசைத்துவிட முடியாது. இந்த உண்மையை இன்றைய  தூய நாளில், தமிழீழத்திலும் உலகெங்கிலும் எமது ஈகியர்களை நினைவுகூரும் இந் நன் நாளில், எமது இதயங்களிற் பதித்து, விடுதலை என்ற எமது மெய்யான குறிக்கோளில் நாம் உறுதிகொள்வோமாக!

மாவீரர் நாள் உரை – 2003