மாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்

மாவீரர் நாள் வணக்கம் தாய்மண் காக்க தம்முயிர் நீத்த மாவீரர்களை வணங்கிப் போற்றுவோம்! விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே! அவர்களையும் தலைவணங்கிப் போற்றுவோம்! அவர்கள் கனவை நனவாக்குவதே உண்மை வணக்கம் என்பதால் அவர்களின் கனவை நனவாக்குவோம்!   மாவீரர் நாள் உறுதிமொழி   “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம் தமிழீழப் போரில்…

மாவீரர் நாள், அமெரிக்கா

  கார்த்திகை 11, 2049 / செவ்வாய்/ 27.11.2018 மாலை 6.05 80-51, 261ஆம் தெரு, கிளென் ஓக்கு, புதிய யார்க்கு – என்.ஒய்.11004 மாவீரர் நாள்   எழுச்சி உரை:  பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கம்  நினைவுரை: வி.உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பிற்கு:   917 8800 320

மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே!  – இலக்குவனார் திருவள்ளுவன்

  மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே!    தமிழீழத்தை மனக்கண்களில் கண்டவர்கள்! தங்கள்  நெஞ்சில் சுமந்தவர்கள்! மனக்கண்களில் கண்ட தமிழீழம் உருவாகும்; அங்கே ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் வாழ்வார்கள்; அடிமைத்தளையறுந்து, பட்ட துயரங்கள் மறைந்து, இன்னல்கள் நீங்கி, இன்பவாழ்வு வாழ்வர்; தமிழும் தனக்குரிய இடத்தை நாட்டிலும் உலகத்திலும் பெறும்; என்னும் நம்பிக்கையில், தங்கள் இன்னுயிரை நீத்தவர்கள் மாவீரர்கள்! இவர்களை வணங்குவது நமக்காகத்தான்! ஆம்! நமக்காக மறைந்தவர்களை – புகழால் வாழ்பவர்களை – நாம் வணங்குவது அவர்கள் கனவுகளை நாம்…

உலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம்

உலகத் தமிழர் பேரவை சார்பில்  மாவீரர்களுக்கு வீர வணக்கம் உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது! http://worldtamilforum.com/forum/forum_news/maaveerar_naal_27112016/   உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோரை நினைக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் (கார்த்திகை 12, 2047/27.11016 காலை 11 மணியளவில்,)  சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் அரு. கோபாலன் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்டன.  ஈகை…

போற்றியே தொழுகின்றோம்! -ஈழத்து நிலவன்

  விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக் குழந்தைகளே! – நாங்கள் விடுதலை வென்றிடக் குழிகளை விட்டு வெளியினில் வாருங்கள்! – நீங்கள் வெளியினில் வாருங்கள்! (விழிகளை மூடிக்…) உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா? (விழிகளை மூடிக்…) மானம் அழிவின்றி வாழவே உயிரைத் தானம் செய்தீரே! – இந்த வானமே போற்றும் வையகம் வாழ்த்தும் என்று நீ வாழ்வீரே! (விழிகளை மூடிக்…) நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே நாம் உமை வணங்குகின்றோம்! –…

மாவீரர்களைச்சிறப்பிப்போம்!-வவுனியா மாவட்ட மக்கள் குழு

மண்ணுறங்கிக் கிடக்கும் ‘மாவீரத்தை’த்  தட்டி எழுப்பிச் சிறப்பிப்போம்!   கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்!!   ‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஈகையரை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்டமக்கள் குழு.   படைவழித் தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க  ஆற்றல்களின்  அனைத்து வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தித்  தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பகுதிகள் மீது நடத்திய நிலக்கவர்வு(ஆக்கிரமிப்பு)ப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது….

உறவாடும் தீயே நீ வாழ்க! – சுடர் விழி

  நெருப்பாகி,நெருப்பாகி, நெருப்பாகி நிமிர்வோம்.. உயிப்போடு,பொறுப்போடு, விருப்போடு நிமிர்வோம்.. நெஞ்சினில் எரியும் தீயே, ஈரம் தருவதும் நீயே.. கண்ணீர் மழையைத் தடுப்போம்.. கல்லறை வேதம் படிப்போம்.. தூங்கும் வீரர் கணவுகளில், தாங்கும் எங்கள் மனசுகளில், தேசத் தாயே நீ வருவாய்! திசைகள் வெடிக்க ஒளி தருவாய்! தலைவன் உரையைக் கேட்ககும் பொழுதே, தலைகள் மெல்ல உயரும் மலழைமுகங்கள் மௌனம் எழுத, மணியும்,ஒலியும் உலவும் தீயின் புதல்வச் சுடராய் மாற, தியாக வேள்வி தொடரும் துயிலும் இல்லப் பாடல் இந்த, தேகம் முழுக்கப் பரவும் பொறுப்புகள்…

கார்த்திகை மாதம்..கனவுகள் ஊர்வலம் போகும் மாதம்! – மு.வே. (இ)யோ

இது மாவீரர் மாதம் கார்த்திகையில்.. கடலடிக்கும்..ஓசை.. காதைப் பிளக்கும்.. வாடைக் காற்றில் பனை ..அடித்து மேளங்கள் கொட்டும்.. விளை நிலங்கள் எங்கும்.. தினை வெடித்துப் பறக்கும்.. சம்பா நெற்கதிர்கள்.. தலை சாய்த்து -புலி வீரர்களை வணங்கும்.. இளங் குமரி.. வடலியிலே.. ..காகங்கள் அமர்ந்திருந்து.. கட்டிய முட்டிகளில்.. கள்ளடித்து.. ..மயங்கி.. புல்லரிக்கும் ..பாடல்களை பாடும்….! கருவேல மரங்களும்.. முல்லைகளும் முருங்கைகளும்.. தெருவோர வாகை மரங்களும்.. முள் முருக்கைகளும் .. பொன்னலரிச் செடிகளும் பெரு மழையைக் கண்டு.. நாணி..நெளிந்து..நடனம் ஆடிக்.. காதலால்.. சிலிர்த்து.. தழைத்து..மகிழ்ந்து.. பூக்களைச் சொரியும்…

வணங்குதற்குரிய வாரம்!

வணங்குதற்குரிய வாரம்!   ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை இரண்டாம் வாரம் / நவம்பர் நான்காம் வாரம் உலகத் தமிழ் மக்களுக்குப் போற்றுதலுக்கும்வணங்குதற்குரியதான சிறப்பான வாரமாகும்.   நவம்பர் 26, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் பெருமங்கலமாகும். வாராது வந்த மாமணியாய் நமக்கு அமைந்த ஒப்பற்ற தலைவர் அவர்.   ‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமை‘(திருக்குறள் 1021)யுடன் வாழும் செம்மல் அவர். சலம்பற்றிச் சால்பில செய்யா மா சற்ற (திருக்குறள் 956) மாமனிதர் அவர்.    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே…