மொழியே நம் விழி – பேரா.முனைவர் சி.இலக்குவனார்
உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மையுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம்.
இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே தமிழ் இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது.
மொழியே நம் விழி; மொழியின்றேல் நமக்கு வாழ்வு இன்று; வாழ்வில் வளமும் இன்பமும் பெறல் அரிது.
பேரா.முனைவர் சி.இலக்குவனார்
பழந்தமிழ் : பக்கம் 13
இன்று மின்தமிழ் எனவும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் எழுதிய காலம் மலையேறி, ஓலைகளில் தீட்டிய காலம் பழையதாகி, இன்று கணினியிலும் செதுக்கப்படும் செந்தமிழ், காலத்தை வென்று விட்டது எனச் சொன்னால் அஃது எப்படி மிகையாகும்?