– அசித்தர்

படிப்போர் பயன் குறிப்பு

ஓர் அயிரை – ஒரு கிராம்

ஒரு குவளை – 250 அயிரை

ஒரு சிறிய கரண்டி – 5 அயிரை

ஒரு பெரிய கரண்டி – 15 அயிரை

muuligai

இந்நூலில் சக்கரை எனக் குறிப்பிடப்படுவது பனை வெல்லம் அல்லது பனஞ் சக்கரை – யையேயாகும். வெள்ளைச் சக்கரையை அல்ல.

( ) இவ்வகை பிறை அடைப்புக்குள் வரும் சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும்.

 

எலும்பைக் கரைக்கும் குளிர் குடிப்புகள்

கோடைக்காலததில் களைப்பைப் போக்க மட்டுமல்லாது வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கும் கடையில் புட்டிலில் விற்கும் குளிர் குடிப்புகளை வாங்கிப் பரிமாறுவது நாகரிகம் என்கிற நினைப்பில் பலர் இருக்கின்றனர்.  இளைஞர்களோ கையில் ஒரு புட்டிலை பிடித்துக்கொண்டு சுற்றுவது பெருமை என நினைக்கின்றனர்.

இக்குடிப்புகளை அருந்துவதால் வளி / காற்றுத்தொல்லையோடு(GAS) நம் உடலிலுள்ள எலும்பும் கரைந்துபோகும் என்பது நிறுவப்பட்டுள்ளது.

ஒரு சிறு குவளை குடிப்புவில் ஒரு பல்லை போட்டு வைத்தால் பத்து நாட்களில் அப்பல் கரைந்துவிடும் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.  தில்லியில் குளிர் குடிப்பு அதிகமாக அருந்தும் போட்டியில், எட்டு குவளைகள் அருந்தி வெற்றி பெற்ற மாணவன் ஒருவன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான் என்பது நாளேடுகளில் வந்த செய்தி.

 muuligai02

பொதுவாக நமது உடலிலுள்ள எலும்புகள் குறிப்பிட்ட அகவை (வயது) க்கு மேற்பட்டு வளர்ச்சியை நிறுத்திவிடுகின்றன.  அதன்பின்பு நாம் உண்ணும் உணவிலுள்ள புளிகத் (ACIDITY) தன்மையைப் பொறுத்து ஆண்டுதோறும் எட்டு முதல் பதினெட்டு விழுக்காடுகள் எலும்பானது கரைந்து மூத்திரம் வழியே வெளியேறுகிறது.

எலுமிச்சம்பழச் சாற்றை அதிக அளவு குடிக்கப் பயன்படுத்தினால் உடலில் உள்ள சுண்ண ஊட்டத்தை அழித்துவிடும். இயற்கை புளிகத்திற்கே இந்நிலை என்றால் வேதி புளிகத்தால் பலவகை கேடுகளும் விளையும். புளியைத் தின்றால் அரத்தம் சுண்டிவிடும் என்று நம் தாய் கவனப் படுத்துவாரே, நினைவிருக்கிறதா?

புளிகத் தன்மை என்பது உணவில் உள்ள சாம்பரியம் (POTTACIUM), சுண்ணம் (CALCIUM), வெளிமம் (MAGNESIUM) ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது.  எனவே புளிகத் தன்மையுள்ள குளிர் குடிப்புகள் நம் பற்களையும் எலும்புகளையும் கரைத்து ஊறு விளைவிக்கச் செய்கின்றன.  இவை  முழுமையாக தவிர்க்கப்படவேண்டிய  கேடுகள். நஞ்சுகள்.

உடல் நலம் தரும் குடிப்பு வகைகள்

நமது தமிழ் மரபிலே சித்தர்களால் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட குடிப்புகள் பல. பன்நெடுங்காலமாக மக்கள் இவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.  இவை நமது உடலுக்கு நலம் சேர்ப்பதுடன் நன்மருந்தாகவும் பயன்தருகின்றன.  அவற்றுள் சில:

1.தாமரை

thamarai lotus01தாமரைப் பூ ஒரு கைப்பிடி எடுத்து தண்ணீரில் போட்டு  தண்ணீர் நன்கு கொதித்ததும் எடுத்து வடிகட்டி சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து குடித்து வருவதன் மூலமாக உட்சூடு, தாகம் ஆகியவை அடங்கிக் கண் குளிர்ச்சி பெறும்.  இதய படபடப்பை குறைக்கும்.  ஆண்களுக்கு விந்து வலுவும் பெண்களுக்கு கருப்பை வலுவும் கூட்டும்.

2.சீரகம்seerakam01

சீரகத்தை உலர்த்திப் பொடித்து, ஓர்  அயிரை (1 GRAM) அளவாக ஒரு குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வர பித்தம், காற்றுச் சிக்கல், குருதிப்போக்கு, குளிரக் (சீத) கழிச்சல், செரியாக் கழிச்சல், சுவையின்மை, பித்தமயக்கம், கண்ணெரிச்சல்,வயிற்றுவலி, மூலக்கொதிப்பு, உடல்வெப்பம் ஆகியவை தீரும்.

3.கொத்துமல்லி

Corianderஐந்து அயிரை கொத்துமல்லி விதையை இடித்து இரு குவளை நீரில் விட்டு ஒரு குவளையாகக் காய்ச்சி வடிகட்டிப் பால் சக்கரை கலந்து காலை மாலை சாப்பிட வலுவிழப்பு, மிகுதாகம், நாவறட்சி, மயக்கம், குருதிக் கழிச்சல், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.  கொத்துமல்லி இலையை பச்சையாக துகையல் அல்லது சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர எரிநறா (சாராய) வெறி நீங்கும்.

4.வெந்தயம்venthayam01

இரவு படுக்கும் முன் கால் சிறுகரண்டி வெந்தயத்தை நீரில் போட்டு வைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்புண் நீங்கும்.  வெந்தயப் பொடியை ஒரு சிறு கரண்டியாகக் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மூத்திரப் பிணி குணமாகும்.

5.ஓமம்oamam01

தூய்மையான ஓமத்தை வறுத்துப் பொடித்து, ஓர் அயிரை அளவுக்கு நீருடன் கொள்ளப் பசியை மிகுக்கும்.  வயிற்று காற்று தீரும்.

6.மிளகுmilaku01

அரை அயிரை மிளகுப் பொடியுடன் ஓர் அயிரை  வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கைச் சுற்றி ஏற்படும் சளிச்சவ்வு உளைச்சல் / உளைச்சளி (SINUSITIS), தலைச்சுமை, தலைவலி நீங்கும்.

மூன்று அயிரை மிளகைப் பொடித்து இரு குவளை நீரில் போட்டு ஒரு குவளையாகக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும்.  மருந்து வீறு தணியும்.

7.கொட்டைக்கரந்தைSphaeranthus-indicus kottai karanthai01

கொட்டைக்கரந்தை இலைப் பொடியை கால் சிறுகரண்டி அளவு ஒரு குவளை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, வெல்லம் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை, உள்புண், கழிச்சல் கரப்பான் ஆகியவை தீரும்.  நீடித்துச் சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு, குடல் ஆகியவற்றை வலுப்படுத்தும்.  மூளை குடலை தூய்மை செய்யும்.

8.வல்லாரைvalarai01

வல்லாரை இலையை கால் சிறுகரண்டி, நீரில் போட்டு கொதிக்க வைத்து வெல்லம் கலந்து குடிக்கவும் அல்லது உலர்த்தி பொடித்து ஐந்து அயிரை எடை காலை மாலை சாப்பிட்டு வர வளி / காற்று, விரைவீக்கம், யானைக்கால், குட்டம், நெறிக்கட்டி, கண்டமாலை, மூத்திரப்பிணி  புண், மாதவிடாய்க் கட்டு (சூதகக்கட்டு) தீரும்.  மூளை வலுவையும் சுறுசுறுப்பையும் சிந்தனைத் திறனையும் தரும்.

9.முளரிப்பூ (ROSE)Old Blush, gr. Chinensis, sect. Chinensis

10 முதல் 20 அயிரை வரை பூவைக் காய்ச்சி குடிநீராக்கி வடிகட்டி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர வளி, பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.  வெல்லம் சேர்க்காமல் கொப்பளிக்க வாய்ப்புண், வீறு குறையும்.  நீடித்துச் சாப்பிட்டு வர இதயம், கல்லீரல், நுரையீரல், இரைப்பை, மூத்திரக்காய், குடல், மலவாய் முதலியவை வலுவாகும்.

kudippu01(தொடரும்)