வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110
(குறள்நெறி)
- (பயனும் நன்மையும் நல்கும்) இன்சொல் கூறு!
- எக்காலமும் இன்பம் தரும் இன்சொல் பேசு!
- இன்சொல் இனிமை தருகையில் வன்சொல் பயன்படுத்தாதே!
- (பழமிருக்கக், காய் உண்டல் போன்று,) இன்சொல் இருக்க, இன்னாத கூறாதே!
- (வையகமும் வானகமும் ஈடாகா வண்ணம்) உதவாதவர்க்கும் உதவி செய்!
- உற்றநேரத்தில் உதவு!
- பயன்கருதாமல் உதவி செய்!
- (பயன்தெரிவார்க்குப் பனையளவாகும் வண்ணம்) திணையளவு செயலேனும் செய்!
- உதவப்பட்டோரின் எண்ணத்திற்கேற்ப உதவியை மதிப்பிடு!
- தூயவர் உறவை மறக்காதே!
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120]
Leave a Reply