(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220  தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230

(குறள்நெறி) 

  1. ஊருணி போல் செல்வத்தால் பிறருக்கு உதவு!.
  2. பயன்மரம் போல் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்து!
  3. வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்காதே!
  4. நல்லன செய்ய இயலாத வறுமையாளனாக வாழாதே! 
  5. ஒப்புரவினால் கேடு வந்தால் உன்னை விற்றாவது பெற்றுக் கொள்!
  6. கொடையை விரும்பின் வறியவர்க்குக் கொடு!
  7. நல்லவழியில் வந்தாலும் பெறாதே!
  8. மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத் தவறாதே!
  9. இல்லை என்று சொல்லாமல் கொடு!
  10. கேட்போர் மகிழும் வகையில் கொடு!

 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240]