வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26. அடக்க முடைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. தொடர்ச்சி)
மெய்யறம்
மாணவரியல்
26. அடக்க முடைமை
251.அடக்க மனம்புலத் தணுகா தடக்கல்.
அடக்கம் என்பது மனத்தை ஐம்புலன்களில் இருந்தும் காத்தல் ஆகும்
.252.அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல்.
அடக்கம் என்பது அறிஞர்களுக்கு எப்பொழுதும் அடங்கி நடத்தல் ஆகும்.
- அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும்.
அடக்கம் நல்லொழுக்க நெறியில் நடக்கச் செய்யும்.
- அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும்.
அடங்காமை நல்லொழுக்க நெறியை மீறச் செய்யும்.
- அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே.
அடக்கம் பல வகையான செல்வங்களையும் தரும்.
- அடக்க மிலாமை யழிவெலாந் தருமே.
அடங்காமை எல்லாவற்றையும் அழித்துவிடும்.
- அடக்கமெய் வீட்டிற் கடிப்படி யாகும்.
அடக்கம் மெய்யாகிய வீட்டின் முதற்படியாகும்.
258.அப்படி யேறினா ரடைவரவ் வீடு.
அடக்கம் உடையவர் வீடுபேற்றை அடைவார்.
- அப்படி யேறா ராழ்வர்வெந் நரகு.
அடக்கம் இல்லாதவர் நரகத்தில் வீழ்வார்.
- ஆதலா லடக்க மநுதின மோம்புக.
ஆதலால் எப்பொழுதும் அடக்கத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்.
– வ.உ.சிதம்பரனார்
Leave a Reply