வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) : பரத்தையை விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) தொடர்ச்சி)
மெய்யறம்
இல்வாழ்வியல்
37(2.07) பரத்தையை விலக்கல்
- பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள்.
பரத்தை உடலின்பத்தைப் பலருக்கும் விற்பவள்.
- மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள்.
எல்லோருக்கும் சொந்தமாகக் கூடிய அவள் மது, சூது இவ்விரண்டை விடத் தீமை தரக் கூடியவள்.
363.அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்;
அவள் மீது நம் கவனம் சென்றால் நம்மை முற்றிலும் அழிப்பாள்.
- இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்;
இன்பம் தருவது போல் எல்லாத் துன்பங்களையும் தருவாள்.
- உடைமுதற் பொருளெலா முயிரொடு கவர்வள்.
அவள் நமது செல்வமனைத்தையும் கவர்வதோடு உயிரையும் கவர்ந்துவிடுவாள்.
- அவளினும் வஞ்சக ரவனியி லில்லை.
அவளை விடத் தீயவர் இந்த உலகத்தில் இல்லை.
- அவளினுங் கள்வ ரருளின ரெனலாம்.
அவளை விடத் திருடர் கருணை நிறைந்தவர்.
- அவளுள நினைந்தாற் றவசியுங் கெடுவான்.
அவளை நினைத்தால் தவம் செய்பவர்களும் அழிந்துவிடுவர்.
- அவளா லந்தோ வழிந்தவ ரநேகர்.
அவளால் முற்றிலுமாக அழிந்தவர் பலர்.
370.அவளிலா நாடே யழிவுறா நாடு.
அவள் இல்லாத நாடே வளர்ச்சி அடையும்.
Leave a Reply