வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) : பரத்தனை விலக்கல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) தொடர்ச்சி]
மெய்யறம்
இல்வாழ்வியல்
38. பரத்தனை விலக்கல்
- தன்றுணை யலாளைத் தழுவுவோன் பரத்தன்.
தன்னுடைய மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் இன்பம் அநுபவிப்பவன் பரத்தன்.
- பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன்
அவன் பரத்தையை விடத் தீயவன்.
- பொதுமக ளாதலம் முழுமக னாலே.
அந்த அறிவிலியால் தான் ஒரு பெண் பரத்தை ஆகிறாள்.
374.நன்மகன் கெடுதலப் புன்மக னாலே.
அந்தத் தீயவனால் நல்லவனும் கெடுவான்.
375.மறனெலா நிகழ்வதம் மாபாவி யாலே.
அத்தீயவனால் தான் அறத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுகின்றன.
- அவனைக் காண்டலா லழியும் புகழே.
அவனைப் பார்ப்பவர்களின் புகழ் அழியும்.
- அவனொடு பேசலா லழியு நிறையே.
அவனோடு பேசுபவர்களின் கற்பு அழியும்.
378.அவனொடு சேர்தலா லழியு மனைத்தும்.
அவனோடு சேர்பவர்கள் அனைத்தையும் இழப்பர்.
- அவனிலா நாடே யாகுநன் னாடு.
அவன் இல்லாத நாடே வளர்ச்சி அடையும்.
- அறனு மளியு மமைவுறு நாடு;
அறமும் அன்பும் நிறைந்த நாடாக விளங்கும்.
Leave a Reply