வெருளி நோய்கள் 1411 -1415: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1406 -1410: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1411 -1415
- நடுகல் வெருளி-Placophobia
நடுகல் குறித்து அறிவுக்குப் பொருந்தாத மிகையான பேரச்சம் கொள்வது நடுகல் வெருளி.
நடுகல் குறித்துச் சங்க இலக்கியங்கள் 18 இடங்களில் குறித்துள்ளன. நடுகல் வணக்கம் தொன்றுதொட்டே உள்ளது. நாட்டிற்குக் காவலாக விளங்கிப் போரில் வீர மரணம் அடைந்தவர்க்குத்தான் நடுகல்கள் அமைக்கப்பட்டன.
கல்லறைவெருளி-Coimetrophobia / Koimetrophobia), அழி பொருள் வெருளி(Necrophobia), புதைவுவெருளி-(Taphephobia/ Taphiphobia/ Taphophobia/Taphosphobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது நடுகல் வெருளி.
coimetro என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் புதைவிடம் எனப் பொருள்.
00
- நடுக்க வெருளி – Tremophobia
நடுக்கம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நடுக்க வெருளி.
நடுக்கம் பொதுவாகக் கைககளில் முதலில் வருகிறது. இதனால் எழுதும் எழுத்திலும் நடுக்கம் வெளிப்படுகிறது. பல் நடுக்கம், தலை நடுக்கம் முதலான நடுக்கங்களும் ஏற்படுகின்றன. நடுக்கம் செயலையும் பாதிக்கிறது.
காண்க: வெதிர்ப்பு வெருளி – Tourettephobia
00
- நடுநிலைப்பள்ளி வெருளி – Zhongophobia
நடுநிலைப்பள்ளி குறித்த வரம்பற்ற பேரச்சம் நடுநிலைப்பள்ளி வெருளி.
தொடக்கப்பள்ளி வெருளி(Dimotikophobia) உள்ளவர்களுக்கு நடுநிலைப்பள்ளி வெருளி வர வாய்ப்புள்ளது.
00
- நடைபாதை வெருளி – Pezodromiophobia
நடைபாதை (பக்கப் பாதை/sidewalk) குறித்த வரம்பற்ற பேரச்சம் நடைபாதை வெருளி.
Pezodromio என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பக்கப் பாதை எனப் பொருள்.
00
- நடை வெருளி – Basiphobia / Ambulophobia/ Basophobia/ Basistasiphobia, Basostasophobia
நடை அல்லது வீழ்தல் தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் நடை வெருளி.
நடப்பதற்கும் நடக்கும் பொழுது கீழே விழுந்து விடுவோம் என்று கவலைப்பட்டும் பேரச்சம் கொள்கின்றனர்.
உயர்ந்த இடத்தில் இருக்கும் பொழுது கட்டுப்பாட்டை இழப்பதாக அல்லது கீழே விழப்போவதாகப் பேரச்சம் கொள்கின்றனர்.
ambul என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நடை
காண்க: நிற்பு வெருளி-Stasibasiphobia, Stasiphobia
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply