தலைப்பு-உயர்த்திச் செல்க-சச்சிதானந்தம்தெய்வசிகாமணி :thalaippu_uyarthi chelga_ chatchithanntham Deivasikamani

அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்க!

நடித்து நடித்து நாட்டைத் தொடர்ந்து,

கெடுத்து அழித்து, உழைக்கும் மக்களை,

அடித்துப் பிழைக்க இலவசப் பொருட்களை

அடுக்கி வைத்துக், கீழ்நிலை மக்களைக்

குடிக்க வைத்துக் குடிக்க வைத்தே,

முடக்கி வைக்கும் மடமை கண்டு,

வெடித்து எழுந்து அரசியல் வக்கிரம்,

தடுத்து நிறுத்தித் தமிழன்னை நாட்டை,

ஒடுக்கி வருத்தும் கபடத் திருடரை,

அடித்துத் துரத்தி, அனைவரும் இணைந்து,

அடுத்த நிலைக்கு அன்னை மண்ணை,

எடுத்து உயர்த்திச் செல்ல வேண்டுமென,

படித்த இளைஞர்

கூட்டத்தை நோக்கித்,

தொடுத்து நிற்கிறேன் தமிழ்ச் சரங்களை!

– சச்சிதானந்தம்  தெய்வசிகாமணி

[குறிப்பு : தவறுதலாகக் கவிஞர் பெயர்  தமிழ்சிவா எனக்குறிக்கப்பெற்றிருந்தது. 

இப்பொழுது திருத்தம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. – ஆசிரியர்]