unmai - Mar 16-31 - 2010

1) பண்ணார் தமிழ்ப் பேச்சுப் பாங்கால் பெரியோர்க்கும்

‘அண்ணா’ வா ஆனான் அவன்!

2) மாற்றார் மதிக்கும் மதிவளம் தாங்கிய

ஆற்றலால் ‘அண்ணா’ அவன்

3) இடுக்கண் புரிவோரும் இன்பமெனக் கேட்பர்

அடுக்கு மொழி அண்ணா அவன்!

4) நஞ்சிந்திப் பேயை நசுக்கச் சிறையிருக்க

அஞ்சாத அண்ணா அவன்!

5) தமிழர் தம் பண்பாட்டைத் தாக்கும் வெறியை

அமிழ்த்திடும் அண்ணா அவன்!

6) பேராயக் கட்சிப் பெருங்குற்றம் போக்கிட

ஆராயும் அண்ணா அவன்!

7) சீர் திருத்த கருத்தைச் செந்தமிழ் நல்லேட்டில்

ஆர்த்தெழுதும் அண்ணா அவன்!

8) நல்ல எழுத்தாளன்! நாடறிந்த பேச்சாளன்

அல்லல்வெல் அண்ணா அவன்!

9) தெள்ளு தமிழ்ச் சொற்பொழிவால் தேன்றமிழ் மக்களுளம்

அள்ளிச் செல் அண்ணா அவன்!

10) தமிழனென்று சொல்லித் தலைநிமிர வைக்கும்

அமிழ்த மொழி அண்ணா அவன்!

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/02/kuralneri02-250x75.jpg

குறள்நெறி(மலர்1 இதழ்17): ஆவணி 31, 1995/15.09.1964