அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! – தி.வே.விசயலட்சுமி
அறிவியலாளர்கட்கு அறைகூவல்!
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
பாலம் அமைத்துவிட்டோம்
என்று
மார்தட்டிக்
கொள்ளவேண்டா!
‘எங்கள் ஊரில்
விண்ணுக்குப்
‘பறக்கும்
விலைவாசி
ஏற்றத்தை
இந்த மண்ணுக்குக்
கொண்டுவர
ஏதேனும்
வழிமுறைகள்
சொல்லுங்கள்!
இல்லையெனில்
உங்கள்
அறிவியலை
மூட்டை கட்டி
விண்வெளிக்கே
அனுப்புங்கள்!
தி.வே.விசயலட்சுமி
சிந்திக்க வேண்டிய கருத்து. எளிமையான கவிதை. நன்றி எழுதிய ஆசிரியருக்கு .