prapakaran+

தாயகமே தளையறு !

வளையாது வளரும் பனையே !
யாரை வரவேற்க
வானை வளைக்கிறாய்?

கார்த்திகைப் பூவே
யாரைத் தழுவ -உன்
காந்தள் விரல்கள்
காற்றில் அலைகின்றன?

உப்புக்கடலே!
யாரை எதிர்நோக்கி
எட்டிஎட்டிக் குதிக்கிறாய்?

வன்னிக்காடே
யாருக்கு மாலைசூட்ட
மலர்ந்து கிடக்கிறாய்?

ஆதியாழே!
யார் இசைக்க
சுரம் கூட்டுகிறாய் ?

அமுதத் தமிழே !
எவர் எழுத காத்திருக்கிறாய்?
விடுதலைப் பண்ணை!

தளையறு !
தாயகமே தளையறு !
அணுக்கள் தோறும் அவன்உயிர்ப்பான்
அவனே உயிர்ப்பண் !

இராசா இரகுநாதன்