thalaippu-aanghilakalvi

ஆங்கிலக் கல்வியால் பயனில்லை

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர்பின்

கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;

அணிசெய் காவிய மாயிரங் கற்கினும்

ஆழ்ந்தி ருக்குங் கவியுளம் காண்கிலார்;

வணிக முப்பொரு ணூலும் பிதற்றுவார்;

வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்;

துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்

சொல்லு வரரெட் டுணையப்பயன் கண்டிலார்

பாரதியார்

பாரதி தன்வரலாறு (சுயசரிதை)

bharathiyar01