mulveli01

அன்று….,
கோயில் மணி ஓசையிலும்,
குயில்களின் இன்னிசையிலும்,
மங்கள வாத்திய இசையிலும் ,
மலர்ந்திடும் எங்கள் காலை….,
இன்று…,
கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும்,
பறை எழுப்பும் அவல வசையிலும் ,
ஐயோ …என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை.eezham-genocide41

யுத்தத்தின் வடுக்கள்….
அடுத்தவன் கை ஒன்றை எடுத்து
தன் கையோ? என ஏங்கும் ஒருவன் அங்கே…!
பிணமாய்க் கிடக்கும் ஒருவனுக்கு ……,
அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே…!

தமிழன் அல்லவா…..?
இறந்தும் அவன் பறவைகளுக்குத் தீனி தருகின்றான்.
பிணக்குவியல் அகற்ற அந்த ஊரில் நாதியில்லை…., eezham-genocide42
நாய்களே நன்றிக்கடன் கழிப்பதாய் இறுதிக்கடன் செய்கின்றன.

“இந்தா பிள்ள தேத்தண்ணி” என்ற தாயிடம்…..,
“வந்தேன் அம்மா…” என்று…,
முற்றத்து மரக் கண்ணாடியில் தலை சீவச் சென்றவள்…,
தலையை சீவிச் சென்றதாம் ஒரு பீரங்கி.
அதே மரத்தில் தொங்குகிறது ,அவள் அணிந்த மேலங்கி.
சிங்களவன் பீரங்கிகள் கூட ….,
வல்லுறவு செய்துதான் உயிர் பறிக்குமோ …என்ன?

ஐயகோ..!
கருணைக்கடவுளே! என்று அவனிடம் தேடி ஓட….,
கருவறைச் சிலையில் கால் தடக்கி விழுகிறேன்.
ஐயோ.. என்று அண்ணார்ந்து பார்த்தால்…,
ஐந்து நாள் முன்பு கும்பாபிசேகம் நடந்த கோயில்,
இன்று குண்டால் அபிசேகிக்கப் பட்டுக்கிடக்கிறது.
eezham-genocide43
என்ன கொடுமை அங்கே….?
மரணத்திலும் அணைப்பின் சொரூபமாய் ,
தாயும் சேயும் அங்கே…!
அவள் காலடியில் கணவனோ ..மனிதக் கருவாடு.
என்ன மனிதக் கருவாடு…?
ஆம், ஐநா வின் அங்கத்துவ நாடுகளின் அன்பளிப்பின்
உச்சக் கொடையாய்…எரிகுண்டுகள்(பொசுபரசு குண்டுகள்)
மிச்சமாய் தமிழன் கரித்துண்டுகளாய்…..!

பிணம் அருகே உரிமைகொண்டு ஓலமிட நாதியில்லை அங்கே..!
நரிகள் அங்கே ஊளையிடுகின்றன….,
பதுங்கு குழிகளே எமக்குச் சவக்குழிகள் ஆயின.eezham-genocide45
வீரம் விளைந்த மண்ணில் இங்கே…,
மறவர் உடல்கள் சரிந்து கிடக்கிறது.-ஆனாலும்
வீரத் தழும்புகள் இன்னும் கொதிநிலையில்.

ம்ம்ம்..
ஊருக்குள் ஒரு சுடுகாடு கண்டோம் அன்று,
சுடுகாட்டுக்குள் ஒரு ஊரைத் தேடுகிறோம் இன்று.
செழித்துப் பசுமை செய்த எங்கள் ஊர்…-இன்று
ஊழித் தீயால் சிவந்து கிடக்கிறது.

முள்ளிவாய்க்காலில் என் இனத்திற்கு முடிவுரை எழுத,
நீ முந்தி நான் முந்தி என மேற்குலகம்.
அகிம்சா பேசும் அயல் நாடும் தன் அக்கினிக் கரம் நீட்டுகிறது.eezham-genocide48
என்னடா பாவம் செய்தோம்?
விண்ணதிர வெடியோசை…,கண்ணெதிரே பிணக்குவியல்.
ஐநாவின் மௌனத்தில் அரைமணிக்குள் ,
ஆயிரம் மரணச் செய்திகள்..

மார்பு அறுக்கப்பட்டு மடிந்தவள் மடியருகே…,
பாலுக்காய்க் கதறுகிறது பச்சிளங் குழந்தை.
பால் மணம் மாறாப் பாலகியின்
பாலுறுப்பில் துப்பாக்கி செலுத்தும் பரதேசி அங்கே..ச்சீ ..,
இவர்கள் என்ன இலங்கையின் பாதுகாப்பு படையினரா?அல்ல
பாலியல் பயங்கரவாதிகளா?

அங்கே அறைகூவுகிறானாம்…இலங்கா பதியின் அரசன்,
“தமிழ் மண்ணை அபகரித்து என்னிடம் கொடு,
தமிழ்ப் பெண்களை கற்பழித்து நீ அழி…”
போருக்குப் புறப்படு முன் எடுத்த சத்தியம் அது.

தன் கண்களையே நம்ப முடியா விரோதியாகிறான் தமிழன்.
ஆம்,
துரோகங்களும்,காட்டிக் கொடுப்புகளும் மலிந்து விலைப்படுகிறது.
ஒட்டுக் குழுக்களின் கைவரிசையில் ..- எம்மைக்genocide123
காத்து நின்றவர்களின் கைகள் ஓய்கின்றன.
பாவம் அவர்கள் என்ன செய்ய முடியும்?
வெள்ளைக் கொடியேந்தி நின்றவர்க்கும் ,
பள்ளம் வெட்டிப் படுகொலை செய்யும் யுத்த தருமம் அங்கே…
அது உள்நாட்டு யுத்தமல்ல? உலகமகா யுத்தம்

கம்பனே..! நீ கூட பாடியிரா யுத்த காண்டம் இது.
யுத்தத்தின்..
கொடுமையினால் எம் கண்ணில் நீர் வற்றிவிட்டது.
ஏன்..?
யுத்த சாசனம் எழுதும் பேனாவின் மையும் தீர்ந்து விடுகிறது.
எம் கையும் ஓய்ந்து விடுகிறது, ஆனாலும்
எம் நெஞ்சின் உரமோ வலுப்பெறுகிறது.ltte-march02
இலட்சம் உயிர்ப்பலி கொடுத்தாலும்-எம்
இலட்சிய தாகம் தீராது.
போரும் வாழ்வுமாய் வாழ்ந்த சமூகம் நாங்கள்.
அதன் வடுக்கள் என்றுமே எம் வாழ்வின் அங்கம்.
ஆனாலும் உறுதியுடன்….-நாம்
“வெல்வதை நாளை சரித்திரம் சொல்லும்.”

ltte-women-01

ஈழப்பிரியன் கவிதைகள்.

http://www.tharavu.com/2014/02/blog-post_8543.html