இணைய இதழ்!
இளையவன்
செயா (கந்தையா)
பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை ; பறிக்கக்
காத்திருக்கும் ரோசாமலர் கவின்தென்ற லிலாடும்
பார்த்திருக்கும் பாவையவள் பக்குவமாய்ப் பூக்கொய்ய
சேர்த்திருந்தாள் மகிழ்வைத்தன் செம்முகத்தில் !
பறிப்பவர் இலக்கணம் பாவைக்குத் தெரியும்
ஓரிதழ் உதிர்ந்தாலும் ஓர்குறையே ; அவளுக்கு
இதழ்உதிராப் பூவேபூவைக்கு இதயம்நிறை மகிழ்ச்சி
இதழ் நடத்துவதும் இதற்கொப்பானதே !
இணையஇதழ் கண்டேன் இணையில்லாத் தமிழ்காக்கும்
கணையாக விளங்கிய கால்வழி நடத்தும்
இணையஇதழ் என்றும் அணையாமல் துலங்க
திணையளவாய் வாழ்த்துகிறோம் தீந்தமிழில் !
Leave a Reply