மகளுக்குத் தந்தையின் மடல் – இளையவன்-செயா

  பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880 தி.ஆ. 2046        ஆடவை ( ஆனி )  13          28–06–2015 அன்பு மதுமலர்க்கு வணக்கம். நலம். நாடலும் அதுவே.        கடந்த  22ஆம் நாள்  உங்கள்  புகழுரையை  மின்னஞ்சல் மூலம் படித்தேன். அதனை அப்படியே  ஏற்றுக்கொள்கிறேன். நான் இளைஞர்களிடம் பேசும்போது  ” உன்னை  அறிவாளி  யாரேனும்  பாராட்டும்போது  உடனே ” ஆம்  நான் அறிவாளிதான் ” என்று ஒப்புக் கொள்.  காரணம்  அந்தப்…

“இனிமைத் தமிழில்” மை!

இனிமைத் தமிழில் இருக்கின்ற ” மை ” விகுதிக்       கனிவான மூவெழுத்துச் சொற்கள் எவையெனஎன் கருத்தாய்வில் முனைந்து பொருத்தத் தேடினேன்      திருத்தச் சொற்களைக் குருத்தாய்க் கூறுகிறேன். அண்மை யோடருமை அடிமை இம்மை இனிமை இருமை இளமை இறைமை இன்மை இலாமை யோடுஆளுமை ஆடுமை ஆண்மை ஆணுமை ஆடாமை ஆளாமை ஆணிமை ஆகாமை ஈகாமை உரிமை      உடைமை உண்மை உம்மை உவமை உறாமை ஊராமை ஊர்மை ஊதாமை      ஊதுமை ஊடாமை ஊடுமை எண்மை எளிமை எருமை எம்மை எழுமை     …

மண் பறித்த மானம்! -இளையவன் செயா

விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக்        கெடுதல் செய்வோரையும் கெடவைத்த வீரமிகு  நேத்தாசியைப்பெற்று  வளர்த்த       வங்கமண்  இன்று தொங்கிவிட்டதே ! மொழிஅது தாய்காத்த விழிஅந்த        விழியை அழிப்பதற்கு விழையாதீர் விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும்        பிழையான விருதுஎனப் புறமொதுக்கி பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக்       கழையாக  நினைத்தொடித்த  கவிஞர் பிழையில்லா  இரவீ ந்திரநாத் தாகூர்       பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் ! விடுதலை  வேட்கையால்  வீறுகொண்டு       கெடுதலையே  செய்யும்   கேடர்களை வெற்றிகொள்ள  வீரமுழக்கமிட்ட வீரர்கள்       வற்றிப்  போகாதமண்   வங்கமண் !…

கொரண்டிப் பூ!

  இளையவன் – செயா  மதுரை பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878  தி.ஆ. 2045 சுறவம் ( தை ) 16            29–01–2014 ஆழி   நீர்ப்பரப்பில்   ஆடுகின்ற  நிழலாய் ஊழிப்   பெருவாழ்   விலுழன்று  உதட்டாலே வாழி   வாழியெனும்  வாழ்த்துக்கு  வயமாகித் தாழியள   வாய்த்தாங்கும்  துன்பச்   சுமைதனை மறப்பதற்   கோர்நாள்   மல்லைநகர்  சென்றிந்தேன் பிறப்பதன்  பெரும்பயனை  பிற்றைநாள்   மக்களுக்கு உரைப்பது  போன்றுருவச்  சிலைகள்  என்னுளத்துச் சிறுகு   மறக்கப்   பெருந்துணை  ஆயிற்றே! மல்லை   நகரின்  மாண்புறு  துறைஅன்று சொல்ல  ரியபொருட்  களைச்சேர்த்  தனுப்பி இல்லை  எமக்கீடென  எழிலுட …

இணைய இதழ்!

இளையவன்  செயா (கந்தையா)  பூத்துக்  குலுங்கும்   பூஞ்சோலை ;  பறிக்கக்      காத்திருக்கும்   ரோசாமலர்   கவின்தென்ற   லிலாடும் பார்த்திருக்கும்   பாவையவள்   பக்குவமாய்ப்  பூக்கொய்ய      சேர்த்திருந்தாள்    மகிழ்வைத்தன்    செம்முகத்தில் ! பறிப்பவர்   இலக்கணம்   பாவைக்குத்   தெரியும்       ஓரிதழ்     உதிர்ந்தாலும்   ஓர்குறையே ;  அவளுக்கு இதழ்உதிராப்   பூவேபூவைக்கு   இதயம்நிறை   மகிழ்ச்சி        இதழ்    நடத்துவதும்   இதற்கொப்பானதே ! இணையஇதழ்   கண்டேன்   இணையில்லாத்  தமிழ்காக்கும்        கணையாக   விளங்கிய   கால்வழி   நடத்தும் இணையஇதழ்   என்றும்  அணையாமல்   துலங்க        திணையளவாய்     வாழ்த்துகிறோம்    தீந்தமிழில் !