bharathidasan07

இந்தியா கட்டாயம்? – பாரதிதாசன்

தமிழ்,

அன்னைக்குச் சோறில்லை எம்மிடத்தில் — இந்தி

அனைக்குத் தீனியும் கட்டாயமாம்

சின்னபிள் ளைக்குத்தாய்ப் பாலினொடும் — இந்தத்

தீநஞ்சை ஊட்டுதல் கட்டாயமாம்.

கல்லாமை என்னுமோர் கண்ணோய்க்கே — இந்திக்

கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம்.

இல்லாமை என்னுமோர் தொல்லைக்குமேல் — இந்தி

இருட்டில் வீழ்வது கட்டாயமாம்.

அம்மா எனத்தாவும் கைக்குழந்தை —     இந்தி

அம்மியில் முட்டுதல் காட்டாயமாம்.

இம்மா நிலத்தினில் கல்வித்திட்டம் —       இவ்வா

றிட்டதோர் முட்டாளைக் கண்டதில்லை.

தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் — பெறத்

தக்கதொர் கட்டாயம் ஆக்கிவிட்டால்

போய்விடும் கல்லாமை! இங்கதன்பின் — பிற

புன்மொழிகள்வந்து சேரட்டுமே.

thamizh-hindi01

பாவேந்தர் பாரதிதாசன்