இனித்தது உன் பெயர்!

 

திரும்பிப் பார்க்க வைத்தது நீ மட்டும் அல்ல உன் பெயரும்

திரும்பத் திரும்ப உச்சரித்துப் பார்த்தேன் தேனாய் இனித்தது

 

எழுதி எழுதிப் பார்த்தேன்

என் உயிரோடு ஒட்டிக் கொண்டது

 

பிரிவின் போது எல்லாம் படித்துப் பார்த்தேன் பரிவாய் உணர்ந்தேன்

என் பெயரோடு சேர்த்து எழுதிப் பார்த்தேன் ஏழு பிறவி இனித்தது

உன் பெயரைப் பிரித்துப் பார்த்தேன்

உறைந்த பிணமாய் உணர்ந்தேன்

 

உன்னோடு வாழ விட்டாலும்

என்னோடு வாழும்

உன் பெயரோடு

நான் இன்னும் உயிரோடு

 

எங்காவது உன் பெயரைக் காண்கையில்

என்னைத் தொடர்வதாய்  உணர்கிறேன்

 

வேறு பெயரோடு காண நேர்ந்தால்

வேரறுந்த மரமாய் விழுந்து போகிறேன்

 

மகளுக்கு வைத்து அழகு பார்க்கிறேன்

மனத்தில் பதிந்த உன் பெயரை

 

என் கல்லறையிலாவது எழுதி வையுங்கள்

காண்பவர்கள் அறியக்கூடும்

அவளைவிட அவள் பெயர் அழகென்று!

 

இவண் ஆற்காடு க குமரன் 9789814114