இனிய தமிழ்மொழி - அழ.வள்ளியப்பா ; thalaippu_iniyathamzhmozhi_valliyappaa

இனிய தமிழ்மொழி

    தாய்சொல்லித் தந்த மொழி
தாலாட்டில் கேட்ட மொழி
சந்திரனை அழைத்த மொழி
சாய்ந்தாடிக் கற்ற மொழி
பாட்டிகதை சொன்ன மொழி
பாடிஇன்பம் பெற்ற மொழி
கூடிஆட உதவும் மொழி
கூட்டுறவை வளர்க்கும் மொழி
மனந்திறந்து பேசும் மொழி
வாழ்க்கையிலே உதவும் மொழி

எங்கள் தாய்மொழி-மிக
இனிய தமிழ்மொழி.
இனிய தமிழ்மொழி-அது
எங்கள் தாய்மொழி.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா :

சிரிக்கும் பூக்கள்