(ஆகத்து முதல் ஞாயிறு)

friendship-day-02

சாதி, இனம் சாராது

சமயம், மொழி பாராது

நாடு, நிறம் நாடாது

கல்வி நிலை காணாதுFriendship-bracelets-04

செல்வநிலை தேடாது

பாலினமும் பாராது

ஊனங்களை உணராது

குற்றங்குறை கூறாது

எத்தனை இடர் வரினும்

எள்ளளவும் மாறாது

சொத்து சுகம் இழந்தாலும்

சொந்த பந்தம் இகழ்ந்தாலும்

தத்தளிக்கும் சூழ்நிலையில்

தனது நிலை பாராது

உள்ளமொன்றிப் பழகிடும்friendship-bracelets03

உன்னத நிலையிது

கள்ளமின்றிப் பழகிடும்

அற்புத உறவிது

இவ்வுறவுக் கெவ்வுறவும்

ஈடு இணை இல்லையே

இவ்வுறவுக் கென்றேன்றும்

வானம்தான் எல்லையே!

friendship-01

 நட்புடன்

சிலேடைச் சித்தர் சேது சுப்பிரமணியம்

சிகாகோ

தரவு: முதுவை இதாயத்து