செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்

செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மொழி முப்பெரு  வேந்தர் வளர்த்த மொழி மூப்பே இல்லா இளமை மொழி காப்பியமைந்து கொண்ட மொழி – தொல் காப்பியம்  கண்ட தொன்மை மொழி பரணி பாடிய பண்டை மொழி தரணி போற்றும்  தண்மொழி அகநானூறு தந்த அருமொழி புறநானூறு தந்த புனித மொழி வள்ளுவன் கம்பன் வளர்த்த மொழி  உள்ளம் கவர்ந்த உயர்ந்த மொழி வல்லினம் ,மெல்லினம் இடையினமும் இயல், இசை, நாடக முத்தமிழும் முதல், இடை, கடை என முச்சங்கம் உயிரெழுத்து , மெய்யெழுத்து…

கடைநிலை மாறுமா ? – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்

கடைநிலை மாறுமா ?   மது கொடுக்கும் மயக்கத்தால் மதியிழக்கும் மாக்களெல்லாம் நிதியிழப்பார் ,  மன நிம் – -மதியிழப்பார் , குடல் கெட்டு , உடல் கெட்டு உயிரிழப்பார் .குடும்பத்தார் கதியிழப்பார் , மங்கலப் பெண்டிரெல்லாம் மங்களம் இழப்பார் , மண் கலமாய் உடைந்திடுவார் மகன்கள் கல்வியிழப்பார் , மகள்கள் மணமிழப்பார் . சந்தடி ஏதுமின்றி சந்ததியே   மறைந்துவிடும். இரக்கமின்றி அழிக்கும் அரக்கன் என்பதனால்தான் ஆங்கிலத்தில் ‘ ARRACK ‘ என்றழைத்தாரோ . ‘குடி குடி கெடுக்கும் ‘ என்று பொடி எழுத்தில்…

உலக நட்பு நாள் வாழ்த்துகள் – சேது சுப்பிரமணியம்

   (ஆகத்து முதல் ஞாயிறு) சாதி, இனம் சாராது சமயம், மொழி பாராது நாடு, நிறம் நாடாது கல்வி நிலை காணாது செல்வநிலை தேடாது பாலினமும் பாராது ஊனங்களை உணராது குற்றங்குறை கூறாது எத்தனை இடர் வரினும் எள்ளளவும் மாறாது சொத்து சுகம் இழந்தாலும் சொந்த பந்தம் இகழ்ந்தாலும் தத்தளிக்கும் சூழ்நிலையில் தனது நிலை பாராது உள்ளமொன்றிப் பழகிடும் உன்னத நிலையிது கள்ளமின்றிப் பழகிடும் அற்புத உறவிது இவ்வுறவுக் கெவ்வுறவும் ஈடு இணை இல்லையே இவ்வுறவுக் கென்றேன்றும் வானம்தான் எல்லையே!  நட்புடன் சிலேடைச் சித்தர்…