தலைப்பு-உலகவாழ்த்து, நாமக்கல்கவிஞர் ; thalaippu_ulakavaazhthu_namakkalkavignar

உலக வாழ்த்து  

வாழ்க வாழ்க உலகம் எலாம்

வாழ்க எங்கள் தேசமும்

வாழ்க எங்கள் தமிழகம்

வாழ்க எங்கள் மனை அறம்

வாழ்க மேழிச் செல்வமே

வளர்க நாட்டுக் கைத்தொழில்

வாழ்க எங்கள் வாணிபம்

வாழ்க நல்ல அரசியல்

அன்பு கொண்டு அனைவரும்

அச்சம் இன்றி வாழ்கவே

துன்பம் ஏதும் இன்றியே

துக்கம் யாவும் நீங்கியே

இன்பமான யாவும் எய்தி

இந்த நாட்டில் யாவரும்

தெம்பினோடு தெளிவு பெற்றுத்

தேவர் போற்ற வாழ்குவோம்!

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்